அஜித் பவார், பாதுகாப்பு அதிகாரி உட்பட 5 பேர் பலி.. விமானத்தில் உடன் பயணித்தவர்கள் யார்?
மும்பை: மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த சிறிய ரக விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விமான விபத்தில் துணை முதல்வர் அஜித் பவார் உட்பட அவருடன் பயணித்த 5 பேரும் உயிரிழந்திருப்பது தெரிய வந்துள்ளது. விமானம் தரையிறங்கிய போது கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் கீழே விழுந்து நொறுங்கிய விமானம் தீ பிடித்து எரிந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் அஜித் பவார் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. அரசியல் நிகழ்ச்சி ஒன்றுக்காக புனே மாவட்டம் பாராமதிக்கு காலையில் சிறிய ரக தனி விமானத்தில் பயணித்து கொண்டிருந்தார். அப்போது பாராமதி பகுதியில் தரையிறங்க முயன்ற போது விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளானது.

இந்த விமானம் விழுந்து நொறுங்கியதால், உடனே தீப்பற்றியது. இதனால் அங்கிருந்த மக்கள் சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்துள்ளனர். இதன்பின் உடனடியாக தீ அணைக்கப்பட்டு, உள்ளே இருந்த அஜித் பவார் மற்றும் அவரின் பாதுகாவலர்கள், விமானி உள்ளிட்டோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அஜித் பவார் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மகாராஷ்டிரா அரசியலில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் அஜித் பவாருடன் பயணித்தவர்களின் நிலை குறித்த கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அதன்படி விமானத்தில் பயணித்த 2 விமானிகள், அஜித் பவாரின் பாதுகாப்பு அதிகாரி, உதவியாளர் உள்ளிட்ட அனைவரும் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விமான விபத்தில் சிக்கி ஏராளமான அரசியல் தலைவர்கள் உயிரிழந்திருக்கின்றனர். சஞ்சய் காந்தி, மாதவ்ராவ் சிந்தியா, ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி, அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் டோர்ஜி காண்டு, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் விமான விபத்தில் சிக்கி பலியாகினர்.












Click it and Unblock the Notifications