“ஸ்கெட்சு” போட்டு கவிழ்த்த அஜித் பவார்..2 நாள் முன் கட்சி தலைவராக நியமனம்! உடனே சரத்தை எதிர்த்து சதி
மும்பை: மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக தான் பதவியேற்பதற்கு 2 நாட்களுக்கு முன்பாகவே தான் கட்சியின் தலைவராக நியமிக்கப்பட்டதாக அஜித் பவார் தெரிவித்து இருக்கிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் கிளர்ச்சி அணியை உருவாக்கி எம்.எல்.ஏக்களை பிரித்து சென்று ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து மகாராஷ்டிரா மாநில துணை முதலமைச்சராக பதவியேற்றார் அஜித் பவார். இந்த விவகாரம் தேசிய அளவில் புயலை கிளப்பி இருக்கிறது.

அவருக்கு எதிராக அக்கட்சியின் நிறுவனர் சரத் பவார் பேசிய நிலையில், தனி அலுவலகத்தையே தொடங்கினார் அஜித் பவார். இந்த நிலையில் இன்று தனது ஆதரவாளர்களை கூட்டி சரத் பவாரையே தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பினார்.
20 ஆண்டுகளுக்கு முன் தேசியவாத காங்கிரஸ் கட்சியை தொடங்கி அதை தலைமையேற்று நடத்தி வந்தவரையே கட்சியில் இருந்து அஜித் பவார் நீக்கியது அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கே பேரதிர்ச்சியாக அமைந்தது. இது குறித்து பேசிய அஜித் பவார், இந்த பிரச்சனை தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்புதான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவியேற்றேன். என்றார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏக்கள், சட்ட மேலவை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் அவர் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சிவசேனா - பாஜக கூட்டணியில் இணையும் முடிவுடன் தான் அஜித் பவார் கட்சித் தலைவராகும் முயற்சியில் இறங்கியதாக கூறப்படுகிறது.
தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கையில் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் தேதி அஜித் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக அவர்கள் தரப்பு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளது என கூறுகிறார்கள். இதனால் சரத் பவார் தரப்புக்கு கூடுதல் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
இதேபோல் மகாராஷ்டிராவின் ஆளும் கட்சியான சிவசேனாவை ஏக்நாத் ஷிண்டே தரப்பு கைப்பற்றியது தொடர்பான வழக்கில், ஆளும் கட்சி சாதாரண அரசியல் கட்சிபோல் செயல்பட முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது. எம்.எல்.ஏக்கள் குழு பெரும்பான்மையை நிரூபித்து, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் தஞ்சமடைய முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இந்த சூழலில் சரத் பவாரை கட்சியில் இருந்தே நீக்கிவிட்டு அஜித் பவார் தன்னை தலைவர் என்று கூறுகிறார். உண்மையான தேசியவாத காங்கிரஸ் தாங்கள்தான் என்று கூறி கட்சிப் பெயர் மற்றும் சின்னத்துக்கும் அவர்கள் உரிமைகோரி உள்ளார்கள். அதே நேரம் சரத் பவார் ஆதரவாளர் ஜெயந்த் பாட்டிலும், அஜித் பவார் தரப்பு எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்திடக்கோரி தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அஜித் பவார் தனக்கு 29 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதை காட்டியுள்ளார். சரத் பவார் 17 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. இதில் சில எம்.எல்.ஏக்கள் எப்போது வேண்டுமானாலும் எந்த அணிக்கும் தாவலாம். அஜித் பவார் தரப்பு வாதத்தை தேர்தல் ஆணையம் ஏற்காவிட்டால், அவருக்கு குறைந்தபட்சம் 36 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்தால் நடவடிக்கையில் இருந்து தப்பலாம்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications