அம்பானி வீட்டு வளர்ப்பு நாய் திடீர் மரணம்! பென்ஸ் காரில் தனியொருவனாக வலம் வந்த ஹேப்பி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தின் போது மோதிரத்தை கொண்டு வந்த ஹேப்பி எனும் நாய் இறந்த செய்தியால் அம்பானி குடும்பத்தினர் சோகமடைந்துள்ளனர்.

முகேஷ் அம்பானி வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் எனும் இனத்தை சேர்ந்த ஒரு நாய் வளர்த்து வந்தனர். அதற்கு ஹேப்பி என பெயரிட்டனர். அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் கடந்த ஆண்டு நடந்தது.

ambani dog obituary

ஆனந்த் அம்பானி எப்போதுமே விலங்குகள் மீது அன்பு கொண்டவர். இவர் குஜராத்தின் ஜாம்நகரில் வனதாரா என்ற பெயரில் விலங்குகள் காப்பகத்தை நடத்தி வருகிறார். இதற்காக மாதம் 5 முதல் 7 கோடி செலவிட்டு வருகிறார். இந்த வனதாராவுக்காக ஆண்டுக்கு ரூ 150 முதல் 200 கோடி வரை செலவாகிறது.

விலங்குகளுக்கான உணவு, கால்நடை மருத்துவ குழுவின் கண்காணிப்பு, குளிர்சாதன வசதியுடன் கூடிய மருத்துவப் பிரிவுகள், நவீன மறுவாழ்வு மையத்தின் செலவும் அடங்கும். இந்த இடம் 3000 ஏக்கரில் பரந்து விரிந்துள்ளது.

யானை, சிங்கம், சிறுத்தை, மான், ஆமை, குதிரை மற்றும் 100-க்கும் மேற்பட்ட அரியவகை விலங்குகளுக்கு இயற்கையான சூழல் இங்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விலங்குகள் அனைத்தும் ஆப்பிரிக்கா, தாய்லாந்து, அமெரிக்கா, இந்தியாவிலிருந்து மீட்கப்பட்ட விலங்குகள் ஆகும்.

இந்த விலங்குகளை பராமரிக்கும் ஆனந்த் அம்பானி, அவை காட்டில் இருப்பது போன்ற ஒரு சுதந்திரத்தையும் உருவாக்கியுள்ளார். இங்கு 200 யானைகள், 300 சிறுத்தைகள், 300 மான்கள், 1000-க்கும் மேற்பட்ட பாம்புகள், முதலைகள், ஆமைகள் உள்ளிட்டவை உள்ளன.

இந்த நிலையில் தனது வீட்டிலும் கோல்டன் ரெட்ரீவர் இனத்தை சேர்ந்த நாயை வளர்த்து வந்தார். அதன் பெயர் ஹேப்பி. இது அந்த வீட்டின் செல்லக் குழந்தையாகும். கடந்த ஆண்டு ஆனந்த் அம்பானியின் திருமணத்தில் கூட அகமதாபாத்தை சேர்ந்த பன்க் டிசைனரால் வடிவமைக்கப்பட்ட பிங்க் நிற ஷெர்வானியை அணிந்திருந்தது.

திருமண தம்பதியின் மோதிரத்தை கொண்டு வந்தது. இந்த ஹேப்பிக்கென தனியாக ஒரு பென்ஸ் சொகுசு கார் உள்ளது. அதன் மதிப்பு 4 கோடியாகும். இதற்கு முன்பு ஃபார்ச்சூனர், வெல்ஃபயர் காரில் பயணம் செய்ததாம்.

இந்த நிலையில் அம்பானி வீட்டில் செல்லமாக வளர்ந்த நாய் மீது யார் கண்ணு பட்டதோ அது திடீரென நேற்று இறந்துவிட்டது. இதனால் அம்பானி குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இறந்த ஹேப்பியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர்.

இதுகுறித்து அம்பானி குடும்பத்தினர் இரங்கல் செய்தியில், அன்பே ஹேப்பி, நீ இறந்தாலும் என்னென்றும் எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருப்பாய், எங்கள் இதயங்களில் நீடித்திருப்பாய். சொர்க்கத்திற்கு நீ சென்றதால் எங்களுக்கு பேரிழப்பு என தெரிவித்துள்ளனர். அது போல் அதற்காக ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் ஹேப்பி இறந்த செய்தியை கனத்த இதயத்துடன் பகிர்கிறோம்.

ஹேப்பி வெறும் வளர்ப்பு நாய் மட்டுமில்லை, எங்கள் குடும்பத்தில் ஒருவன். நன்றியுள்ளவன், அளவற்ற அன்பை கொடுத்தது. உன் நினைவுகள் என்னென்றும் இதயங்களில் இருக்கும். உன்னை நாங்கள் மிகவும் மிஸ் செய்கிறோம். உன்னை மறக்கமுடியாது என தெரிவித்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+