அத்துவானக் காடு.. சங்கிலியால் கட்டப்பட்ட அமெரிக்க பெண்.. மகாராஷ்டிராவில் என்ன நடந்தது?
மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் வனப் பகுதியில் மரத்தில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருந்த அமெரிக்க பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணை இங்கு கட்டிவைத்துச் சென்றது யார், எத்தனை நாளாக கட்டி வைக்கப்பட்டுள்ளார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், சிந்துதுர்க் மாவட்டத்தில் சோனூர்லி என்கிற கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கால்நடைகளை மேய்ப்பதற்காக வனப் பகுதிக்குள் கடந்த சனிக்கிழமை சென்றுள்ளார். அப்போது, யாரோ ஒரு பெண் அழுவது போன்ற சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதிக்குச் சென்று பார்த்தபோது ஒரு பெண் இரும்புச் சங்கிலியால் மரத்தில் கட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பார்ப்பதற்கு மிகவும் பலவீனமாகக் காணப்பட்ட பெண் அழுதுகொண்டே இருந்துள்ளார். இதுகுறித்து, அவர் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த அப்பெண்ணை மீட்டு சவந்த்வாடியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சேர்த்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவரை கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்பெண் தற்போது ஆபத்தான நிலையில் இருந்து மீண்டுவிட்டதாகவும், மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், மீட்கப்பட்டுள்ள பெண்ணிடம் இருந்து தமிழக முகவரியுடன் கூடிய ஆதார் அட்டை, அமெரிக்க பாஸ்போர்ட் நகல் மற்றும் விசா ஆகியவை கிடைத்துள்ளன. அதனடிப்படையில், அவரது பெயர் லலிதா கயி என்பது தெரியவந்துள்ளது. அவரது அமெரிக்க விசா காலாவதியாகிவிட்டது. அவரது குடியுரிமை தொடர்பான விவரங்களை கிடைத்துள்ள ஆவணங்கள் மூலம் அறியும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வெளிநாட்டுப் பதிவு அலுவலகங்களுடனும் போலீஸார் தொடர்பு கொண்டு வருகின்றனர். இப்பெண் இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளாக இருந்துள்ளார் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அந்தப் பெண்ணின் உடல்நிலை வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை. கடந்த இரு நாட்களுக்கு மேலாக அவர் சாப்பிடாமல் இருந்துள்ளார். வனப் பகுதியில் பெய்த கன மழை பெய்ததால் அந்தப் பெண் மிகவும் பலவீனமாக காணப்படுகிறார். மரத்தில் எவ்வளவு நாட்கள் கட்டி வைக்கப்பட்டிருந்துள்ளார் என்பது குறித்து எங்களுக்குத் தெரியவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பெண்ணின் கணவர், தனது மனைவியை மரத்தில் கட்டிவைத்துவிட்டு தப்பியோடி இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். கிடைத்த ஆவணங்களின் அடிப்படைடியில் பெண்ணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க எங்கள் குழுவினர் தமிழகம், கோவா போன்ற பகுதிகளுக்குச் சென்றுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications