அவந்திகா ரயிலுக்குள் கொட்டிய மழை.. அதுவும் ஏசி பெட்டிக்குள்.. வெளியான வீடியோ.. கடும் விமர்சனம்
மும்பை: அவந்திகா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் நேற்று அதிகமான பயணிகள் பயணம் செய்தனர். இந்த வேளையில் தான் திடெீரென்று ஏசி பெட்டியில் மழை கொட்டியதால் பயணிகள் ஷாக்கானதோடு அவதிப்பட்டனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்தியாவில் ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும் ரயில்வேயில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும் தவறு என்பது ஒட்டுமொத்த ரயில்வே துறையையும் விமர்சிக்க வைத்துவிடுகிறது.

அந்த வகையில் தான் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது. அதாவது மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து மத்திய பிரதேச மாநிலம் இந்தூருக்கு அவந்திகா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் வராத்தின் 7 நாட்களும் இயங்கி வருகிறது.
அவந்திகா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் குஜராத் வழியாக மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சென்றடையும். ரயிலில் தினமும் ஏராளமானவர்கள் பயணித்து வருகின்றனர். இந்நிலையில் தான் நேற்றும் வழக்கம்போல் அவந்திகா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் மும்பையில் இருந்து இந்தூருக்கு புறப்பட்டது.
இந்த வேளையில் கனமழை பெய்து வந்தது. அப்போது ரயிலின் 2ம்நிலை ஏசி பெட்டியில் பயணிகள் பயணம் செய்தனர். அப்போது ரயலின் ஏசியில் இருந்து தண்ணீர் சொட்டியது. சிறிது நேரத்தில் அதிகளவில் தண்ணீர் கசிந்தது. இதனால் ஏசியின் கீழ் இருந்த இருக்கையில் யாராலும் அமர முடியவில்லை. இதுபற்றி உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து ரயில்வே ஊழியர் வந்து கோச்சில் தேங்கிய தண்ணீரை மட்டும் துடைத்து வெளியேற்றினார். இருப்பினும் மழை நிற்கும்வரை ஏசி பெட்டியில் இருந்து தண்ணீர் சொட்டியது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்தனர். இதற்கிடையே தான் அவந்திகா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் மழைநீர் உள்ளே ஷவர்போல் கொட்டும் வீடியோ இணையதளங்களில் வெளியாகி உள்ளது.
இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரயில்வே பயணிகளின் நலன் கருதி இதுபோன்ற பிரச்சனைகளை உடனடியாக சரிசெய்ய ரயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர் ரயில்வே துறையை விமர்சனம் செய்துள்ளனர். சரியான பராமரிப்பு இல்லாததால் ரயில் பெட்டிக்குள் மழைநீர் வருகிறது என விமர்சனம் செய்துள்ளனர். இன்னும் சிலர் வேடிக்கையாக அட பயணிகளின் இருக்கைக்கு அருகேயே ஷவர் அமைத்து ரயில்வே கொடுத்துள்ளதா? என கிண்டல் செய்து விமர்சனம் செய்துள்ளனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications