செபிக்கு ஹிண்டன்பர்க் ஆப்பு! பங்குச்சந்தையில் இல்லாத மக்களுக்கும் ஆபத்து-ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்
மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு செய்யாவிட்டாலும், சாமானியர்களின் சேமிப்பு பணத்திற்கும் ஆபத்து என்று முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை தெரிவித்துள்ளார்.
LICயில் பணம் போட்டவர்கள், வங்கிக் கணக்கில் பணம் வைத்துள்ளவர்கள், மாதந்தோறும் PF பணம் கட்டுபவர்கள், காப்பீட்டு சந்தா செலுத்துபவர்கள் என எல்லோரின் பணமும் பங்குச் சந்தையில்தான் இருக்கிறது. இந்திய மக்களின் பணம் 5 லட்சம் கோடி டாலர்கள் பங்குச்சந்தையில் இருக்கும் போது, 'நான் பங்குச் சந்தையில் எந்த முதலீடும் செய்யவில்லை, அதனால் SEBIயில் என்ன நடந்தாலும் எனக்கு கவலை இல்லை' என இருக்கக் கூடாது என்று முதலீட்டு ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

எச்சரிக்கை: அதானி குழுமம் மற்றும் செபி மீது ஹிண்டன்பர்க் நிறுவனம் பல குற்றச்சாட்டுகளை வைத்து உள்ளது. இது தொடர்பாக மூத்த பொருளாதார ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் முக்கியமான விமர்சனங்களை வைத்துள்ளார், கேள்விகளை எழுப்பி உள்ளார்.
பொருளாதார ஆலோசகர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் பகிர்ந்துள்ள போஸ்டில், அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் இந்தியாவின் பங்குச்சந்தை ஒழுங்காற்று ஆணையமான செபி மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. செபியின் தலைவர் மாதபி பூரி புச் அதானிக்கு சொந்தமான வெளிநாட்டு பங்குகளில் பணம் முதலீடு செய்துள்ளார்.
தற்போதைய செபி தலைவர் மாதபி புரி புச் அவர்களின் கணவர் தவால் புச்சும், வினோத் அதானி வைத்துள்ள அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர். அதானியின் பங்குகளில் இவர்கள் அதிக அளவில் முதலீடுகளை செய்துள்ளனர். அதானிக்கு சரிவு ஏற்பட்டால் தங்களுக்கும் சரிவு ஏற்படும் என்று செபி அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என்று இதில் குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது.
மாதபி புச் மற்றும் அவரது கணவர் தவால் புச் ஆகியோர் முதலில் சிங்கப்பூரில் ஜூன் 5, 2015 அன்று ஐபிஇ பிளஸ் ஃபண்ட் 1 இல் தங்கள் கணக்கை தொடங்கி உள்ளனர். எங்களுக்கு கிடைத்த விசில்ப்ளோவர் ஆவணங்கள் மூலம் அந்த தம்பதியரின் நிகர மதிப்பு $10 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.அதாவது தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பு 56 கோடி. இதே பங்குகளில் அதானி குழுமமும் முதலீடுகளை செய்துள்ளது. செபி தலைவரும் அவரது கணவர் தவால் புச்சும், வினோத் அதானி பயன்படுத்திய அதே பெர்முடா மற்றும் மொரீஷியஸ் நாட்டு பங்குச்சந்தை பங்குகளில் முதலீடு செய்துள்ளனர், என்று பரபரப்பு குற்றச்சாட்டுகளை செபி மீது ஹிண்டன்பர்க் வைத்துள்ளது.
பின்னணி: “ஐபிஇ பிளஸ் ஃபண்ட்” என்பது வயர்கார்ட் ஊழலுடன் தொடர்புடைய செல்வ மேலாண்மை நிறுவனமான இந்தியா இன்ஃபோலைன் (ஐஐஎஃப்எல்) மூலம் அதானி இயக்குனரால் அமைக்கப்பட்ட ஒரு சிறிய ஆஃப்ஷோர் மொரீஷியஸ் நிதியாகும்.
வினோத் அதானி - கெளதம் அதானியின் சகோதரர் - அதானி குழுமத்திற்கு மின் உபகரணங்களை அதிக விலைக்கு விற்று அந்த லாபத்தை இந்திய சந்தைகளில் முதலீடு செய்ய இந்தக் கட்டமைப்பைப் பயன்படுத்தினார்.
மாதபி புச் செபியில் முழு நேர உறுப்பினராக இருந்த காலத்தில், அவரது கணவர் 2019 இல் பிளாக்ஸ்டோனுக்கு மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.அவரது LinkedIn சுயவிவரத்தின்படி, அவர்\ இதற்கு முன், ரியல் எஸ்டேட் அல்லது மூலதனச் சந்தைகளிலோ எந்த முன் அனுபவமோ இருந்ததில்லை. பிளாக்ஸ்டோன் நிறுவனம் இந்தியாவில் ஒரு புதிய சொத்து வகுப்பான REITS இன் மிகப்பெரிய முதலீட்டாளர்கள் மற்றும் ஸ்பான்சர்களில் ஒருவர்
தவல் புச் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், அவரது மனைவி செபி அதிகாரியாக இருந்தபோது, பிளாக்ஸ்டோன் ஸ்பான்சர் மைண்ட்ஸ்பேஸ் மற்றும் நெக்ஸஸ் டிரஸ்ட், ஐபிஓவுக்கு செபி அனுமதியைப் பெறுவதற்கு இத்திரு இந்தியாவின் இரண்டாவது மற்றும் நான்காவது REIT ஆனது.
தவல் புச் பிளாக்ஸ்டோனுக்கு ஆலோசகராக இருந்த காலத்தில், SEBI முக்கிய REIT விதிமுறைகளில் மாற்றங்களை முன்மொழிந்து, அங்கீகரித்து, எளிதாக்கியது. இதில் 7 ஆலோசனைத் தாள்கள், 3 ஒருங்கிணைந்த புதுப்பிப்புகள், 2 புதிய ஒழுங்குமுறை கட்டமைப்புகள் மற்றும் யூனிட்களுக்கான நியமன உரிமைகள், குறிப்பாக பிளாக்ஸ்டோன் போன்ற தனியார் ஈக்விட்டி நிறுவனங்களுக்கு பயனளிக்கும் வகையில் இருந்தது.
தொழில்துறை மாநாடுகளின் போது, SEBI தலைவரான மாதபி புச், REITகளை தனது "எதிர்காலத்திற்கான விருப்பமான ப்ராடெக்ட்" எனக் கூறி, முதலீட்டாளர்கள் சொத்து வகுப்பை "நேர்மறையாக" பார்க்குமாறு வலியுறுத்தினார்.அந்த அறிக்கைகளை வெளியிடும் போது, அவர் இந்த திட்டத்தில் இருந்து பிளாக் ஸ்டோன் நிறுவனம் மிகவும் பயனடையும் என்பதை குறிப்பிடவில்லை. மாதபி புச் தற்போது அகோரா அட்வைசரி எனப்படும் இந்திய ஆலோசனை நிறுவனத்தில் 99% பங்குகளை வைத்துள்ளார், அங்கு அவரது கணவர் இயக்குநராக உள்ளார். 2022 ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் அவருக்கு $261,000 வருவாயை ஆலோசனை வழங்கியதற்கு கொடுத்துள்ளது. இது அவர் செபியில் வாங்கிய சம்பளத்தை விட 4:4 அதிகம். மாதபி புச், அதன் பங்குதாரர் பட்டியல் மற்றும் கார்ப்பரேட் பதிவுகளின்படி, தனது கணவர் தவால் புச்சுடன் ஒரு இயக்குநராக வணிகத்தின் 99% உரிமையாளராக இருக்கிறார். இதை ஹிண்டன்பெர்க் வெளியிட்டுள்ளது.
இத்தனை கேள்விக்கும் இவர்கள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள் என்று பார்ப்போம், என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications