வெளிநாடுகளில் கவனம்பெறும் இந்தியா.. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தால் நடந்த மாற்றம்
மும்பை: நம் நாட்டின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழா கலாசார ரீதியாக இந்தியாவை உலகளவில் புகழ்பெற வைத்துள்ளதோடு, கடந்த ஓராண்டுகளாக வெளிநாட்டு ஊடகங்களில் பேசும்பொருளாகி வருகிறது.
நம் நாட்டின் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவராக முகேஷ் அம்பானி உள்ளார். இவரது மனைவி பெயர் நிதா அம்பானி. இந்த தம்பதியின் கடைசி மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி நடந்தது. ஆனந்த் அம்பானி பிரபல தொழில் அதிபர் வீரேன் மெர்ச்சன்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டை கரம் பிடித்தார்.

இவர்களின் திருமண நிச்சயத்தார்த்தம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரியில் நடந்தது. அதன்பிறகு ஒன்றரை ஆண்டுகள் திருமணத்துக்கு முந்தைய வைபவங்கள் நடந்தன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 3 நாட்கள் அம்பானியின் சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடந்தன. அதன்பிறகு ஆனந்த் அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் மும்பை பாந்திரா - குர்லா காம்பளக்ஸ் பகுதியில் உள்ள ஜியோ வேர்ல்டு கன்வென்சன் சென்டரில் கடந்த ஆண்டு ஜூலை 12ம் தேதி திருமணம் நடந்தது.
ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமண விழாவில் அரசியல்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்கள், நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்சன்ட் திருமணம் நடந்து ஓராண்டு ஆகியும் கூட நம் நாட்டின் கலாச்சார அடையாளமாக உலகளவில் நின்று கொண்டு இருக்கிறது.
இந்த திருமண விழா குஜராத்தின் ஜாம் நகர், ஐரோப்பா மற்றும் மும்பை உள்ளிட்ட இடங்களில் வெளிநாடுகளின் தலைவர்கள், பிரபலங்களுடன் நடந்து முடிந்தது. இது கலாசாரத்தின் மைல்கல்லாகவும், உலகளவில் இந்தியாவின் உறவு பலப்படுத்தும் வகையிலும்அமைந்துள்ளது. ஜாம் நகரில் இருந்து மும்பை வரை சரியான திட்டமிடலும் நடத்தப்பட்ட இந்த திருமண விழா உலகளவில் இன்னும் வெளிநாட்டு ஊடகங்களில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறது. அதோடு நம் நாட்டில் விருந்தோம்பல் மற்றும் நிகழ்ச்சிகள் உலகளவில் நடத்துவதற்கான இந்திய அடையாளத்துடன் உண்மையாகவே உலகளவில் வெளிப்படுத்தி உள்ளது.
அதுமட்டுமின்றி நம் நாட்டை நம்பிக்கையான கலாச்சார ரீதியாக வளமான மற்றும் உலகளவில் இணைக்கப்பட்ட நாடாக காட்டும் தொடர்ச்சியான முயற்சியாக இது தனித்து நிற்கிறது. நாட்டின் உள்கட்டமைப்பு, விருந்தோம்பல் என எதுவாக இருந்தாலும், கொண்டாட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் ஒருபகுதியாக பிரதிபலிக்கப்பட்டுள்ளது. வணிகம், தூதரகம் மற்றும் கலாச்சார ரீதியிலாக இந்தியா தனது செல்வாக்கை தொடர்ந்து விரிவுப்படுத்தும் வரும் நிலையில் அதற்கு வலுசேர்க்கும் வகையில் இந்த திருமணம் உள்ளது. கலாச்சார, பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றியதோடு, பிரமாண்டமான கொண்டாட்டங்களை நடத்துவதற்கான நாட்டின் திறனை வெளிக்காட்டி உள்ளது.
அம்பானி குடும்பத்தை பொறுத்தவரை இந்த திருமணம் என்பது நம் நாட்டின் விருந்தோம்பல் மற்றும் கலாசாரத்தின் செறிவை காட்டும் விழாவாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த விருந்தினர்கள் இந்தியா நிலப்பரப்பில் மட்டுமின்றி சடங்கு, மியூசிக், ஆன்மீகம், சமையல் என அனைத்து பிரிவிலும் வளமானதாக இருப்பதை உணர்ந்தனர். திருமணம் முடிந்து ஓராண்டு முடிந்தும் கூட இது சர்வதேச அளவில் நம் பெருமைமிகு கலாசார உறவின் அடையாளமாக இன்று வரை தொடர்கிறது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications