'நியாயமற்றது.. என்ன சிக்க வைக்க முயற்சி நடக்கிறது..' மும்பை ஹைகோர்டில் ஆர்யன் கான் பரபர மனு.. ஏன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: சிறையில் உள்ள ஆர்யன் கான் மும்பை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் என்சிபி அதிகாரிகள் தன்னை சிக்க வைக்க முயல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

மும்பையில் இருந்து கோவா செல்லும் கப்பலில் போதைப் பொருட்களைப் பயன்படுத்தி ரேவ் பார்ட்டி நடைபெறுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.

அப்போது போதைப் பொருட்களைப் பயன்படுத்தி பார்ட்டி நடைபெறுவதை உறுதி செய்த என்சிபி அதிகாரிகளில் முதலில் 10 பேரைத் தடுப்பு காவலில் வைத்தனர். விசாரணைக்குப் பின்னர் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

என்சிபி எதிர்ப்பு

என்சிபி எதிர்ப்பு

இதில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் 23 வயது மகன் ஆர்யன் கானும் கைது செய்யப்பட்டார். ஜாமீன் கோரி அவர் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். ஆர்யன் கானுக்கு ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவினர், அவர் சமூகத்தில் பவுர்புலரான இடத்தில் இருப்பதால் சாட்சியங்களை அழிக்கும் வாய்ப்புள்ளதாக வாதிட்டார். ஆர்யன் கான் எதோ ஒரு முறை மட்டும் போதைப் பொருளைப் பயன்படுத்தியவர் இல்லை கடந்த சில ஆண்டுகளாகவே அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், ஆர்யன் கானுக்கு சர்வதேச போதைப்பொருள் நெட்வொர்கில் தொடர்பு இருப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜாமீன் மனு தள்ளுபடி

ஜாமீன் மனு தள்ளுபடி

அதேநேரம் கைது செய்யப்பட்ட போது ஆர்யன் கானிடம் எந்தவொரு போதைப்பொருளும் என்பதையே அவரது வழக்கறிஞர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இருப்பினும், ஆர்யன் கானின் வாட்ஸ்அப் சாட்கள் அவர் போதைப் பொருளைப் பயன்படுத்தியது உறுதி செய்யும் வகையில் உள்ளதால் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும், சமூகத்தில் பவுர்புல்லான நபர் என்பதால் ஆதாரங்களை அழிக்க முயலலாம் என்றும் நீதிபதி தெரிவித்தார்.

முற்றிலும் நியாயமற்றது

முற்றிலும் நியாயமற்றது

இதையடுத்து ஆர்யன் கான் தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்யன் கானின் ஜாமீன் மனு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனது மொபைல் போனில் இருந்து வாட்ஸ்அப் சாட்களை என்சிபி அதிகாரிகள் தவறான முறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது முற்றிலும் நியாயமற்ற ஒன்று எனத் தெரிவித்துள்ளார்.

யாரையும் தெரியாது

யாரையும் தெரியாது

பல மாதங்களுக்கு முன் நடந்த ஒரு வாட்ஸ்அப் சாட்டை இந்தச் சம்பவத்துடன் தொடர்புப்படுத்துவது சரியானது இல்லை என்றும் கூறியுள்ளார். என்சிபி அதிகாரிகள் தன்னை கைது செய்தபோது போதைப்பொருட்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்றும் கப்பலில் இருந்தவர்களில் இருவரைத் தவிர வேறு யாரையும் தனக்குத் தெரியாது என்றும் ஆர்யன் கான் தெரிவித்துள்ளார். ஒரு நபர் செல்வாக்கு மிக்கவராக இருப்பதால், அவர் ஆதாரங்களைச் சேதப்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது என்று சட்டமும் கூறவில்லை என்று தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சிக்க வைக்க முயற்சி

சிக்க வைக்க முயற்சி

மேலும், போதைப்பொருள் எதிர்ப்பு அமைப்பு தன்னை சிக்க வைக்க முயல்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை வரும் அக். 26ஆம் தேதி நடைபெறுகிறது. முன்னதாக இது தொடர்பாகப் பாலிவுட் நடிகை அனன்யா பாண்டேவிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நேற்று விசாரணை நடத்தினர். அப்போது அனன்யா பாண்டே தான் ஒருபோதும் போதை மருந்து உட்கொள்ளவில்லை, ஆர்யனுடனான வாட்ஸ் அப் சாட் ஜோக்குக்காக செய்யப்பட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+