இந்தியா - பாகிஸ்தான் போட்டி வேண்டாம்.. மோடி - அமித்ஷாவுக்கு பிரஷர் போடும் பிரியங்கா.. யார் இவர்?
மும்பை: ‛‛பாகிஸ்தான் வீரர்கள் பயங்கரவாதிகளுக்கு தான் ஆதரவாக உள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தும்வரை நமக்கு பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் போட்டி வேண்டாம். ‛ஆபரேஷன் சிந்தூர்' தொடரும் என்று பிரதமர் மோடி சொன்னால் இந்த போட்டியை நடத்த பிசிசிஐக்கு அனுமதியளித்தது யார்? உடனடியாக இந்த போட்டியை ரத்து செய்ய வேண்டும்'' என்று சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடர் டி20 போட்டியாக தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. அதன்படி 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அணிகள் இடம்பெற்றுள்ளன. 'பி' பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியா தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொண்டு வெற்றி பெற்றது. முதலில் பேட் செய்த ஐக்கிய அரபு அமீரக அணி 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய இந்திய அணி 4.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ரன்கள் எடுத்து அமோக வெற்றி பெற்றது.
இந்தியா தனது 2 லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது. இந்த போட்டி வரும் 14ம் தேதி துபாய் மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ளது. இந்த போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் போர் நட்நதது. அதன்பிறகு நடக்கும் முதல் போட்டி இதுவாகும். இதனால் கிரிக்கெட்டிலும் பாகிஸ்தானை இந்தியா பந்தாட வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அதேவேளையில் இன்னொரு தரப்பினர் பாகிஸ்தான் உடன் இந்தியா கிரிக்கெட் விளையாடக்கூடாது என்று கூறி வருகிறது. இதுபற்றி சிவசேனா (உத்தவ் அணி) எம்பி பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், ‛‛ஆசிய கோப்பை தொடரின் ஒரு பகுதியாக துபாயில் நாளை இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதுபற்றி நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆபரேஷன் சிந்தூர் பற்றி வெளிநாடுகளிடம் எடுத்து கூறும் நாடாளுமன்ற குழுவில் நான் இடம்பெற்றிருந்தேன். பல்வேறு நாடுகளுக்கு சென்றோம். பயங்கரவாதிகளுடன் ஒருபோதும் பேச்சுவார்த்தை, வர்த்தகம் இருக்காது என்று கூறினோம்.
பயங்கரவாதிகளால் பஹல்காமில் 26 பேர் இறந்தனர். 26 பெண்கள் கணவன்களை இழந்து உள்ளனர். இதனால் தான் ‛ஆபரேஷன் சிந்தூர்' நடந்தது. பாகிஸ்தானக்கு நாங்கள் உரிய பதிலடி கொடுத்தோம். பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஒழிக்கும் வரை அவர்களுடன் வர்த்தகம், பேச்சுவார்த்தை இருக்காது என்று தீர்மானித்து இருப்பதாக கூறினோம். ஆனால், இப்போது கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியை ரத்து செய்ய பிசிசிஐ தலைவரிடம் மத்திய உள்துறை அமைச்சர் பேச வேண்டும் நான் வலியுறுத்தினேன்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நம்மை அவமானப்படுத்துவதோடு, ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தையும் சமூக வலைதளங்களில் தவறாக பேசி உள்ளனர். அவர்கள் எப்போதும் பயங்கரவாதிகளுடன் தான் நின்றார்கள். ‛ஆபரேஷன் சிந்தூர்' தொடர்கிறது என்று பிரமதர் மோடி சொன்னால் பாகிஸ்தானுடன் இந்த போட்டியை நடத்த பிசிசிஐ-யின் ஏற்பாடுக்கு அனுமதி கொடுத்தது யார்? இந்த போட்டியை ஸ்ட்ரீம் செய்ய வேண்டாம்.
இந்த நேரத்தில், 26 பேரை இழந்து துக்கத்தில் இருக்கும் குடும்பங்களுடன் அனைவரும் சேர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக ஒற்றுமையாக நிற்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் வீரர்கள் பயங்கரவாதிகளை ஆதரிப்பதை நிறுத்தும் வரை நாங்கள் பாகிஸ்தானுடன் விளையாட வேண்டாம்'' என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications