வீடியோ பாருங்க.. இந்த ஆட்டோ டிரைவருதான் உண்மையான சூப்பர் ஹீரோ... ஆனால் போலீஸ் செஞ்சதுதான் கொடுமை

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்த ஆட்டோ டிரைவர் தான் உண்மையில் சூப்பர் ஹீரோ... கொஞ்சமும் அச்சப்படாமல் மும்பையில் ரயில்வே ஸ்டேசன் பிளாட்பாரத்திற்குள் ஆட்டோ ரிக்ஸாவை அதிவேகத்தில் ஒட்டி பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்றியுள்ளார். இந்த சாகச செயலுக்காக அவரை போலீஸ் கைது செய்தது தான் கொடுமை.

மும்பையில் விரார் ரயில் நிலையத்தில் கடந்த 4ம் தேதி ஒரு இளம் பெண் கடுமையான பிரசவ வலியால் துடித்துக் கொண்டிருந்தார். அந்த பெண்ணை காப்பாற்ற ஒரு ஆட்டோவை அவரது கணவர் அழைத்தார். அந்த ஆட்டோ டிரைவர கொஞ்சமும் தாமதிக்காமல் பிரசவ வலியால் துடித்த பெண்ணை காப்பாற்ற அதிவேகத்தில் ரயில்வே ஸ்டேசனுக்குள் ஆட்டோ ரிக்ஸாவை வேகமாக ஒட்டிச்சென்றார்.

Auto-rickshaw on platform at mumbai Railway Station to pick a pregnant woman

அதிவேகத்தில் ரயில்வே பிளாட்பாரத்தில் ஆட்டோ ரிக்ஸா வருவதை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்து ஒதுங்கினர். அந்த ஆட்டோ ஒட்டுனர் அப்படியே அதே வேகத்தில் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துசென்று பத்திரமாக சேர்த்தார்.

இதை பார்த்த ரயில்வே போலீசார் அவரை அன்றைக்கு தடுத்து நிறுத்தவில்லை. கைதும் செய்யவில்லை. ஆனால் அதன்பிறகு விதிகளை மீறி ரயில்வே பிளாட்பாரத்திற்கு ஆட்டோ ஒட்டிவந்ததாக டிரைவரை . கைது செய்து அழைத்துச்சென்றனர். ஒருபுறம் அவரது துணிச்சலா செயலை பாராட்டிய ரயில்வே போலீசார் மறுபுறம் கைது செய்தது விமர்சனத்தை ஏற்படுத்தியது.. இந்நிலையில் அவரை எச்சரித்து விடுவித்தனர் .

இந்நிலையில் இந்த வீடியா இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் அந்த ஆட்டோ டிரைவரின் செயலை வெகுவாக பாராட்டி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+