‛ரூ.30,000 கோடி'.. BCCI-யிடம் எவ்வளவு கோடி இருக்கு தெரியுமா? வட்டியாக ரூ.1000 கோடி கிடைக்குதாம்!
மும்பை: பிசிசிஐ-க்கு 2023-24ம் நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இதில் ஐபிஎல்லில் இருந்து மட்டும் ரூ.5,761 கோடி கிடைத்துள்ளது. அதோடு பிசிசிஐயின் மொத்த கணக்கில் ரூ.30 ஆயிரம் கோடி உள்ளதாகவும், ஆண்டுக்கு சுமார் ரூ.1,000 கோடியை வட்டியாக மட்டும் தான் கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் உள்ள கிரிக்கெட் வாரியங்களில், பிசிசிஐ எனும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பணக்கார வாரியமாக உள்ளது. இதன் ஆண்டு வருவாய் என்பது மிகவும் அதிகம். இன்னும் சொல்லப்போனால் ஐசிசி எனப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலை விட பிசிசிஐயின் வருமானம் பலமடங்கு அதிகம்.

இந்நிலையில் தான் பிசிசிஐயின் ஆண்டு வருமானம், கையிருப்பு, ஐபிஎல்லில் கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை பற்றிய முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விபரம் வருமாறு:
பிசிசிஐ-க்கு 2023-24ம் நிதியாண்டில் மட்டும் ரூ.9,741.7 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது. இதில் ஐபிஎல்லில் இருந்து மட்டும் ரூ.5,761 கோடி கிடைத்துள்ளது. இந்த ஆண்டில் பிசிசிஐயின் மொத்த வருவாயில் ஐபிஎல் மட்டும் 60 சதவீதத்தை ஈட்டி கொடுத்துள்ளது. பிசிசிஐக்கு இப்படி வருமானம் குவிய முக்கிய காரணம் அதன் விளம்பரம், ஊடக ஒப்பந்தம் மற்றும் ஸ்பான்ஷர்ஷிப்பும் முக்கிய காரணமாகும்.
ஐபிஎல் தவிர பிசிசிஐக்கு ஊடக ஒப்பந்தம் மூலமாக ரூ.361 கோடி வரை கிடைத்துள்ளது. மகளிர் பிரிமீயர் லீக் மூலமாகவும் வருவாய் கிடைத்துள்ளது. வரும் காலத்தில் இந்த வருமானம் இன்னும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் பிசிசிஐயின் கையிருப்பு என்பது ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கிறது. இதன்மூலம் ஆண்டு வருமானமாக ரூ.1,000 கோடி கிடைப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி ரெட்ஃயூஷன் நிறுவனத்தின் தலைவர் சந்தீப் கோயல் கூறுகையில், ‛‛ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சிகே நாயுடு டிராபி போன்ற பாரம்பரிய கிரிக்கெட்டுகளை வணிகமாக்கபபட்டுள்ளது. இதுதவிர ஐபிஎல்லும் கைக்கொடுக்கிறது. ஐபிஎல் போன்று ரஞ்சி டிராபி, துலீப் டிராபி, சிகே நாயுடு டிராபியையும் வணிகமாக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதனால் இன்னும் கூட அதிக வருவாய் பிசிசிஐக்கு கிடைக்க உள்ளது.
பிசிசிஐயிடம் தற்போது ரூ. 30,000 கோடி கையிருப்பு வைத்துள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு சுமார் ₹1,000 கோடி வட்டி வருமானமாக கிடைக்கிறது. இது அப்படியே இருப்பது இல்லை. ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கும். இதனால் பிசிசிஐயின் வருமானம் ஆண்டுக்கு 10-12% வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது," என்றார்.
இதுதொடர்பாக பிரபல வர்த்தக வியூக நிபுணர் லாயிட் மதியாஸ் கூறுகையில், ‛‛2007ல் பிசிசிஐ, ஐபிஎல் என்ற தங்க முட்டையிடும் வாத்தை கண்டுபிடித்தது. ஐபிஎல் புகழ்பெற்றது. அதேபோல் ரஞ்சி கோப்பை வீரர்களையும் விளையாட அனுமதிக்கிறது. அதுமட்டுமின்றி ஊடகம், விளம்பர ஒப்பந்தம் உள்ளிட்டவற்றையும் பெற்றது. இதனால் தொடர்ந்து வருவாய் உயர்ந்து வருகிறது'' என்றார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications