ஐபிஎல் ஏலம்: எவ்வளவு வீரர்களை அணி தக்க வைக்கலாம்? வெளிநாட்டு வீரர்கள் எத்தனை பேர்? பிசிசிஐ அறிவிப்பு
மும்பை: ஐபிஎல் தொடரில் புதிதாக சேர்ந்துள்ள அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகளும் ஏலத்திற்கு முன் மூன்று வீரர்களை தேர்வு செய்யலாம் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
ஏற்கனவே உள்ள 8 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணிகள் அதிகபட்சமாக இப்போது அவர்களிடமுள்ள நான்கு வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியும் என்பதை பிசிசிஐ உறுதிப்படுத்தியுள்ளது.
ஐபிஎல் அணி உரிமையாளர்களுக்கு பிசிசிஐ இன்று அனுப்பியுள்ள மின்னஞ்சலில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

8 அணிகள்
"தற்போதுள்ள 8 அணிகள் முதலில் அதிகபட்சமாக 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்பைப் பெறும், அதன்பிறகு 2 புதிய அணிகள் ஏலத்திற்கு முன் அதிகபட்சமாக 3 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள முடியும்" என்று பிசிசிஐ அந்த மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

சம்பளம் எவ்வளவு
ஐபிஎல் 2022 சீசனுக்கான சம்பள உச்சவரம்பு அனைத்து அணிகளுக்கும் 90 கோடி ரூபாய் ஆகும். "தற்போதுள்ள 8 அணிகள் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள 2021 நவம்பர் 1 முதல் 2021 நவம்பர் 30ம் தேதி வரை வாய்ப்பு திறந்து இருக்கும். அதன்பிறகு 2 புதிய அணிகள் வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள டிசம்பர் 1 முதல் டிசம்பர் 25ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தக்க வைக்க முடியாது
பழைய 8 டீம் உரிமையாளர்கள் மூன்று இந்தியர்களுக்கு மேல் (இந்தியாவிற்காக ஆடியவர்கள்/ஆடாதவர்கள் என யாராக இருந்தாலும்) வீரர்களைத் தக்கவைக்க முடியாது என்றும், அதே நேரத்தில் தக்கவைப்பு பட்டியலில் வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை இரண்டு என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. ஒரு அணி இரண்டுக்கு மேற்பட்ட புதிய வீரர்களை அதாவது, இந்திய அணிக்கு ஆடாத புதிய வீரர்களை தக்க வைத்திருக்க முடியாது. ஏலத்தில்தான் எடுக்க வேண்டும் எனஅறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அணிகளுக்கு ரூல்ஸ்
புதிய அணிகளைப் பொறுத்தவரை, இரண்டு இந்திய வீரர்களை ஏலமில்லாமல் எடுக்கலாம். வெளிநாட்டு வீரர்களின் எண்ணிக்கை ஒருவராக மட்டுமே இருக்க முடியும். தவிர, புதிய அணிகள் ஏலத்திற்கு முன் ஒரே ஒரு புதிய வீரரை அதாவது இந்தியாவிற்கு ஆடாத புதிய வீரரை தேர்வு செய்ய முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய அணிக்கு கட்டுப்பாடு
மொத்தத்தில், புதிதாக வந்துள்ள அணிகளுக்கு அணி தேர்வு என்பது சற்று சிரமமான விஷயமாக இருக்கப்போகிறது என்பதைத்தான் இந்த விதிமுறைகள் காட்டுகின்றன. ஏற்கனவே உள்ள அணிகளுக்கு கூடுதல் உரிமை தரப்பட்டுள்ளதாகத்தான் இதை பார்க்க முடிகிறது என்று, ரசிகர்கள் கூறுகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications