"இந்தியா" கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நிதிஷ்குமார்? மும்பை கூட்டத்தில் அறிவிப்பு?
மும்பை: லோக்சபா தேர்தலுக்காக உருவாக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி ஒருங்கிணைப்பாளராக ஜேடியூ மூத்த தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ்குமார் அறிவிக்கப்படக் கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஒருங்கிணைப்பில் நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து "இந்தியா" கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளன. இதன் முதல் கூட்டத்தை பீகார் மாநிலம் பாட்னாவில் நடத்தினார் நிதிஷ்குமார். இதன்பின்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 2-வது கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் "இந்தியா" என கூட்டணிக்கு பெயரிடப்பட்டது.

"இந்தியா" கூட்டணியின் 3-வது கூட்டம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் நடைபெற உள்ளது. வரும் 31 மற்றும் செப்டமப்ர் 1-ந் தேதி நடைபெறும் மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணி முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதனிடையே மும்பையில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணி கூட்டத்தில் அதன் ஒருங்கிணைப்பாளராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் "இந்தியா" கூட்டணியின் சின்னம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளதாம்.
மும்பை கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், இந்தியா கூட்டணி கூட்டத்தில் நான் பங்கேற்கிறேன். மேலும் சில புதிய கட்சிகள் இந்தியா கூட்டணி கூட்டத்தில் இணைய உள்ளன என்றார்.
இந்தியா கூட்டணியில் 26 கட்சிகள் இதுவரை இடம்பெற்றிருக்கின்றன. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் 3 கட்சிகளும் இதர வடகிழக்கு மாநிலங்களில் இருந்து 2 க்ட்சிகளும் உத்தரப்பிரதேசத்தில் இருந்து ஒரு கட்சியும் இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்னொரு பக்கம், இந்தியா கூட்டணியின் மும்பை கூட்டத்தை நீர்த்து போகச் செய்ய மத்தியில் ஆளும் பாஜக படுதீவிரமாக முயற்சித்தும் வருகிறது. இந்தியா கூட்டணியின் முக்கிய கட்சிகளில் ஒன்றான தேசியவாத காங்கிரஸை பாஜக பக்கம் இழுத்துவிடுவதற்கான அனைத்து நகவுகளையும் பாஜக மேற்கொண்டு வருகிறது. மும்பையில் கூட்டம் நடைபெறும் போது தேசியவாத காங்கிரஸ் ஏதேனும் ஒரு அதிர்ச்சி தரக் கூடிய அறிவிப்பை வெளியிடக் கூடும் என்கின்றன சில ஊடக செய்திகள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications