"இதெல்லாம் ரொம்ப தப்பு!" 13 ஆண்டுக்கு முன் வெளியான "சிங்கம்" படத்தை திடீரென சாடிய நீதிபதி! என்னாச்சு
மும்பை: வழக்கு ஒன்றில் "சிங்கம்" திரைப்படத்தை மிகக் கடுமையாக விமர்சித்துள்ள மும்பை ஐகோர்ட் நீதிபதி, இதுபோன்ற ஹீரோ போலீஸ் திரைப்படங்கள் மிக மோசமான செய்தியை மக்களுக்கு அனுப்புவதாகவும் விமர்சித்துள்ளார்.
போலீஸ் திரைப்படங்களுக்கு இங்கே எப்போதும் தனி மவுஸ் இருக்கவே செய்கிறது. இது இப்போது என்றில்லை.. அந்தக் காலம் முதலே இங்கே இதே டிரெண்ட். தங்கப் பதக்கம் தொடங்கி போலீஸ் ரோலீல் நடித்த ஹீரோக்கள் லிஸ்டையே தனியாகப் போடலாம்.

இதுபோன்ற படங்களில் தவறு செய்யும் கிரிமினல்களுக்கு ஹீரோக்களே தண்டனை தருவார்கள். பெரும்பாலான போலீஸ் படங்களில் இதுதான் நடக்கும். இதைத்தான் இப்போது மும்பை ஐகோர்ட் நீதிபதி மிகக் கடுமையாக விமர்சித்தார்.
ஹீரோ போலீஸ்: "சிங்கம்" போன்ற படங்களில் சட்டத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது குறித்து கவலையின்றி, விரைவான நீதியை வழங்கும் "ஹீரோ போலீஸ்" திரைப்படம் சமூகத்தில் மிகப் பெரிய தீங்கை ஏற்படுத்துவதாகவும் அது தவறான செய்திகளை மக்களுக்கு அனுப்புவதாகவும் மும்பை ஐகோர்ட் நீதிபதி கெளதம் படேல் தெரிவித்தார்.
இந்தியக் காவல்துறை அறக்கட்டளையின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "போலீஸ் துறையில் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களில் பிரகாஷ் சிங் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒரு நழுவிப்போன வாய்ப்பு... ஆனால் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.. நம்மை நாமே சீர்திருத்திக் கொள்ளாவிட்டால் இதுபோன்ற சட்ட அமலாக்கத் துறைகளைச் சீர்திருத்தவே முடியாது.
தவறான பிம்பம்: போலீஸ் என்றாலே கொடுமைப்படுத்துபவர்கள், ஊழல்வாதிகள் என்று பொதுவாகப் பிம்பம் உள்ளது. போலீசார் மட்டுமின்றி நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் என பொது வாழ்க்கையில் இருக்கும் அனைவர் மீதும் இதே பிம்பம் தான் இருக்கிறது. நீதிமன்றங்கள் தங்கள் பணியைச் சரியாகச் செய்யவில்லை எனப் பொதுமக்கள் நினைக்கும் போது, போலீசார் தலையிட்டால் அது கொண்டாடப்படுகிறது.
இதன் காரணமாகவே பலாத்காரக் குற்றவாளிகள் தப்பி ஓட முயன்றதாகக் கூறி என்கவுன்டர் செய்யப்படும் போது அதை மக்கள் கொண்டாடுகிறார்கள். சரியான நீதி வழங்கப்பட்டதாக மக்கள் நினைக்கிறார்கள்.. ஆனால் உண்மை அதுதானா என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை ஆதரிப்பது ஆபத்தானது. ஆனால் துரதிருஷ்டவசமாக நமது சினிமாக்களும் இதையே தான் காட்டுகிறது.
சினிமாக்களில் நீதிபதிகளை எப்படிக் காட்டுகிறார்கள். கூச்ச சுபாவம் உள்ளவர்கள் என்பது போலவும், எதுவும் தெரியாதவர்கள் போலவும் காட்டுகிறார்கள். நீதிபதிகளை நோக்கி போலீசார் சரமாரியாகக் கேள்விகளைக் கேட்பது போலக் காட்டுகிறார்கள். குற்றவாளிகள் நீதிமன்றங்களில் இருந்து தப்புவதாகச் சொல்லும் படங்கள், ஹீரோ போலீஸ் தனியாக நீதி வழங்குவதைப் போலக் காட்டுகிறார்கள்.

சிங்கம்: குறிப்பாகச் சிங்கம் திரைப்படத்தைச் சொல்லலாம். அதன் கிளைமேக்ஸ் காட்சியில் பிரகாஷ் ராஜ் கொல்லப்படுவார். இதன் மூலம் நீதி கிடைத்துவிட்டதாகச் சொல்வார்கள். ஆனால், உண்மையில் யோசித்துச் சொல்லுங்கள்.. இதன் மூலம் நீதி கிடைத்துவிட்டதா.. இது எந்தளவுக்கு ஆபத்தான ஒரு செய்தியை மக்களுக்கு அனுப்புகிறது எனப் பாருங்கள்.. ஏன் இந்தளவுக்கு நாம் பொறுமையில்லாமல் இருக்க வேண்டும்..
ஒருவர் குற்றவாளியா இல்லை குற்றம் செய்யாதவரா என்பதைத் தீர்மானிக்க நாம் ஒரு செயல்முறையைக் கடந்து செல்ல வேண்டும். இந்த செயல்முறை மெதுவாக இருப்பதாகச் சிலர் சொல்வார்கள். அவை மெதுவாகத் தான் இருக்க வேண்டும். ஏனென்றால் இவை ஒரு தனிநபரின் சுதந்திரம் பறிக்கப்படக்கூடாது என்பதற்காகவே சட்டத்தின் நடைமுறை இப்படி இருக்கிறது. குறுக்கு வழிகள் காரணமாக நாம் இந்த செயல்முறையைக் கைவிட்டால் நாம் சட்டத்தை மதிப்பதில்லை எனப் பொருள்" என்று அவர் தெரிவித்தார்.
மும்பை ஐகோர்ட் நீதிபதி குறிப்பிடும் சிங்கம் திரைப்படம் கடந்த 2011இல் ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் அஜய் தேவ்கன் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம். இது கடந்த 2010இல் சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான சிங்கம் படத்தின் ரீமேக் தான். இதைத்தான் மும்பை ஐகோர்ட் நீதிபதி மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications