மும்பையில் புல்டோசர் ராஜ்ஜியம்! இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் வீடுகள் இடிப்பு
மும்பை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மும்பையில் நடந்த ராமர் ஊர்வல பேரணியில் மற்றொரு பிரிவினர் தாக்குதல் நடத்தினர். இந்த நிலையில் இந்து அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தியவர்களின் வீடுகளை போலீசார் புல்டோசர் மூலம் இடித்து தள்ளியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கிய பணிகள் மூன்று ஆண்டுகளாக முழு வீச்சில் நடைபெற்றது. கட்டுமான பணிகள் ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை மேற்பார்வையில் விறு விறுப்பாக நடந்து வந்தது. நாகரா பாணியில் அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டது. ராமர் கோயிலின் ஒவ்வொரு தளமும் 20 அடி உயரம் கொண்டது.

கலை நயத்துடனும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தாக்குப்பிடிக்கும் வகையிலும் கட்டப்பட்டுள்ள இந்த பிராமாண்ட ராமர் கோவிலில் நேற்று கும்பாபிஷேகம் மற்றும் பால ராமர் சிலை பிரதிஷ்டை நடைபெற்றது. கும்பாபிஷேகத்துக்கான சிறப்பு பூஜைகள் கடந்த 16-ந் தேதி தொடங்கி நடைபெற்ற நிலையில், நேற்று நண்பகல் 12.20 மணிக்கு பால ராமருக்கு பிரான பிரதிஷ்டை நடைபெற்றது.
மும்பையில் ராம ஊர்வலம்: அயோத்தி கோயில் கும்பாபிஷேக விழாவில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் களை கட்டியிருந்தன. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவின் போது பொதுமக்கள் பலரும் தங்கள் வீடுகளில் விளக்கு ஏற்றி வழிபட்டனர். பல இடங்களில் ஜெய்ஸ்ரீராம் என கோஷத்துடன் மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். பல்வேறு மாநிலங்களில் உள்ள கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும் நடந்தது.
இதேபோல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் இந்து அமைப்புகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டன. ஆலய வழிபாடுகள், கோயில்களை சுத்தம் செய்தல், பஜனைகள், ஆன்மிக யாத்திரைகள் அன்னதானம் போன்ற நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், மும்பை அருகே உள்ள மீரா ரோடு பகுதியில் நேற்று முன் தினம் ஸ்ரீராம் ஷோபா யாத்திரை என்ற பெயரில் ராம ஊர்வலம் நடைபெற்றது..
இரு தரப்பிரனர் மோதல்: கார்கள், பைக்குகளில் காவிக் கொட்டி கட்டியபடி பலரும் பேரணியில் ஊர்வலமாக சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக மற்றொரு பிரிவினர் திடீரென கல் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்து அமைப்புகளும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் மாறி மாறி கல் வீசிக்கொண்டதால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
புல்டோசர் மூலம் இடிப்பு: இந்த மோதலில் சிலருக்கு காயமும் ஏற்பட்டது. பேரணியாக சென்ற கார்களையும் மற்றொரு பிரிவினர் அடித்து நொறுக்கியதாக தெரிகிறது. உடனடியாக விரைந்து வந்த போலீசார், இந்த மோதல் தொடர்பாக 12 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதனிடையே, இரு தரப்பினருக்கு இடையே நடைபெற்ற மோதலில் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு சொந்தமான சட்ட விரோத ஆக்கிரமிப்பு இடங்களை போலீசார் புல்டோசர்கள் மூலம் இடித்து தள்ளினர்.
தேவேந்திர பட்னாவிஸ் ட்வீட்: இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "மோதலில் ஈடுபட்ட 15 பேருடைய வீடுகள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் இருந்ததால் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்பட்டன” என்றனர். முன்னதாக மும்பையில் இரு பிரிவினர் இடையேயான இந்த மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. அதில், இருபிரிவினரும் மாறி மாறி கற்களை கொண்டு தாக்கினர்.
இந்தக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தனது எக்ஸ் தளத்தில் இந்த மோதல் தொடர்பாக கூறுகையில், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீத உள்ளவர்களையும் கைது செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
உ.பியை பின்பற்றி: சிசிடிவி காட்சிகளை கொண்டு தேடி வருகிறோம். மகராஷ்டிர மாநிலத்தில் அமைதியை சீர்குலைக்க முயற்சித்தால் சகித்துக்கொள்ள மாட்டோம்” என்றார். உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யாநாத் அரசு பொறுப்பேற்ற பிறகு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களுக்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறி புல்டோசர்கள் மூலம் வீடுகள் உடைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், இதே பாணியை பின்பற்றி மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா - பாஜக கூட்டணி அரசும், குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர்களுக்கு சொந்தமான இடங்களை புல்டோசர்கள் மூலம் உடைத்துள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications