மாஸ்டர் ஸ்டிரோக்.. தாக்கரே குடும்பத்தின் கையை விட்டு போகும் சிவசேனா? பாஜக தந்திரம்.. என்ன நடக்கும்?
மும்பை: சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா முதல்வராக அறிவிக்கப்பட்டு உள்ளார். பாஜகவின் இந்த முடிவு உத்தவ் தாக்கரே தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது. அதோடு தேவேந்திர பட்னாவிஸ் முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.
மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று அறிவித்தார். சிவசேனா கட்சியை சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் மகா கூட்டணிக்கு எதிராக திரும்பியதால் அங்கு அரசியல் குழப்பம் ஏற்பட்டது.
பாஜகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே சிவசேனா அரசுக்கு ஆதரவு அளிக்க முடியும் என்று ஷிண்டே மற்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் அங்கு சிவசேனா அரசு பெரும்பான்மை இழந்தது.

சிவசேனா
இந்த நிலையில் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய உத்தவ் தாக்கரே அரசு முயன்றது. ஆனால் அந்த முயற்சியும் உச்ச நீதிமன்ற இடைக்கால தடையால் தோல்வியில் முடிந்தது. அதோடு இன்றே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் உத்தவ் தாக்கரேவிற்கு ஏற்பட்டது. இதனால் மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே நேற்று இரவு அறிவித்தார்.

பட்னாவிஸ்
இந்த நிலையில் தேவேந்திர பட்னாவிஸ் பாஜக சார்பாக இன்று ஷிண்டே ஆதரவுடன் முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே அம்மாநில முதல்வராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். கவர்னர் பகத் சிங்கை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரிய ஷிண்டே.. இன்று இரவு 7.30 மணிக்கு சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் முதல்வராக பொறுப்பேற்கிறார். முதல்வர் பதவிக்கு ஆசைப்பட்டுதான் உத்தவ் தாக்கரே - தேவேந்திர பட்னாவிஸ் இடையே மோதலே ஏற்பட்டது. இதுதான் அங்கு பாஜக கூட்டணியில் இருந்து விலகி சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி வைக்க காரணமாக அமைந்தது.

குழப்பம்
ஆனால் இப்போது அதே பட்னாவிஸ் முதல்வர் பொறுப்பை ஷிண்டேவிற்கு விட்டுக்கொடுத்துள்ளார். பாஜகவின் இந்த முடிவை பாஜக ஆதரவாளர்கள், தேசிய அரசியல் வல்லுனர்கள் மாஸ்டர் ஸ்டிரோக் என்று அழைக்கிறார்கள். இதற்கு காரணம் இல்லாமல் இல்லை.. ஷிண்டேவை முதல்வர் ஆக்கினாலும்.. தேவேந்திர பட்னாவிஸ்தான் நிழல் முதல்வர் போல செயல்படுவார். இதனால் அதிகாரத்தை அவருக்கு கொடுப்பதில் சிக்கல் இல்லை என்கிறார்கள்.

பாஜக திட்டம் என்ன?
மேலும் பாஜகவின் திட்டமே வேறு என்கிறார்கள் தேசிய அரசியல் வல்லுனர்கள். அதன்படி இப்போது ஷிண்டேவை முதல்வர் ஆக்கினால் சிவசேனா தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் அவர் பலம் வாய்ந்த தலைவராக தெரிய தொடங்குவார். அதோடு ஏற்கனவே ஷிண்டேவிற்கு 40 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளனர். இன்னும் 14 எம்எல்ஏக்கள் மட்டுமே தாக்கரே தரப்பில் உள்ளனர். ஷிண்டே முதல்வர் ஆனால், இவர்களும் ஷிண்டே பக்கம் செல்ல வாய்ப்பு உள்ளது.

தகுதி நீக்கம்
இந்த நிலையில் தகுதி நீக்க வழக்கில் ஜூலை 12ம் தேதி வரை ஷிண்டே அணிக்கு நேரம் இருக்கிறது. ஒருவேளை அதிக எம்எல்ஏக்கள் ஷிண்டே பக்கம் இருப்பதால் தகுதி நீக்கம் செல்லாது என்று தீர்ப்பு வந்தால், ஷிண்டே..அதிகாரபூர்வமாக சிவசேனா கட்சி சின்னத்திற்கு உரிமை கோர முடியும். நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று ஷிண்டே உரிமை கோர முடியும். அதாவது சட்டசபையில் ஷிண்டே தரப்பிடம்தான் சிவசேனாவின் கட்சி சின்னமான வில் அம்பு இருக்கும்.

பிளான் என்ன
ஷிண்டேவை முதல்வர் ஆக்குவதன் மூலம் சிவசேனாவில் உத்தவ் தாக்கரே அதிகாரத்தை நீக்க முடியும்,. தாக்கரேவிற்கு எதிராக ஷிண்டேவை வளர்த்துவிட பாஜக மேற்கொண்ட தந்திரம் இது என்று அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். சிவசேனாவில் தாக்கரே குடும்பத்தின் முடிவுரை இன்று எழுதப்பட்டுவிட்டது. ஷிண்டேதான் இனி உண்மையான சிவ சேனா என்று இப்போதே அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்.

தலைவர் யார்?
உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக ஷிண்டேவை பெரிய நபராக உயர்த்தி தாக்கரே தரப்பை மொத்தமாக நிர்மூலமாக்கும் திட்டம் இது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். ஆனால் தாக்கரேதான் கட்சி விதிப்படி இப்போதும் கட்சி தலைவர்தான். அவரை அப்பொறுப்பில் இருந்து நீக்க பொதுக்குழு கூட வேண்டும். ஆட்சி போனாலும் அதிகாரபூர்வமாக கட்சி இன்னமும் உத்தவ் தாக்கரே கையில்தான் இருக்கிறது. ஆனால் சட்டசபைக்கு உள்ளே நாங்கள்தான் உண்மையான சிவசேனா என்று ஷிண்டே தரப்பு கூறவே அதிக வாய்ப்புள்ளது.

குழப்பம்
இதனால் உண்மையில் யார்தான் சிவசேனா என்ற குழப்பம் அக்கட்சி தொண்டர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் எப்படி எடப்பாடி - ஓபிஎஸ் அணி உருவானதோ அப்படி. ஆனால் இது அதைவிட கொஞ்சம் சிக்கலானது. உச்ச நீதிமன்றம் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் பட்சத்தில் இந்த குழப்பங்களுக்கு எல்லாம் தீர்வு கிடைக்கும். ஆனால் உச்ச நீதிமன்றம் ஷிண்டே தரப்பு எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யுமா என்ற ஜூலை 12ம் தேதிதான் தெரியும்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications