ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள்.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை
மும்பை: நாட்டில் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான ஆணவக் கொலைகள் நடைபெறுவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் வேதனை தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது: 1991-ல் உத்தரப்பிரதேசத்தில் 15 வயது தலித் சிறுமி, ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். சட்டம் என்பது வெளிப்புற நிகழ்வுகளை மட்டுமே கட்டுப்படுத்தக் கூடியது அல்ல. மக்களின் உள்வாழ்க்கையையும் ஒழுங்குபடுத்தக் கூடியது சட்டம்.
நமது நாட்டின் அரசியல் சாசனத்தின் அடிப்படையில், அடிப்படை உரிமைகளைத் தாங்கக் கூடியவர் ஒரு தனிநபர்தான். சமூக மேலாதிக்கம் போன்றவைகளாள் சட்ட கட்டமைப்புகளை, அரசியல் சாசன அமைப்பை நீர்த்துப் போகச் செய்துவிட முடியாது. அரசியல் சாசனம் என்பது நடைமுறைக்கு வந்த பின்னரும் கூட சமூக மேலாதிக்க சக்திகள் பல்வேறு கட்டுப்பாடுகளை திணிக்கின்றன.

பொதுவாக சட்டங்கள் என்பவை பெரும்பான்மை வாக்குகள் மூலம் நிறைவேற்றப்படுகின்றன. நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது பெரும்பான்மையினர் வாக்குகளை மையமாகக் கொண்டது. ஆனால் பெரும்பான்மை என்பது மேலாதிக்க குழுக்கள் வசம் உள்ளது. அவர்களது சிந்தனையும் எண்ண ஓட்டமுமே திணிப்பாகவும் அமைகிறது.
இதனால் ஜாதி மறுப்பு திருமணங்கள் என்பவை பெரும் குற்றமாகப் பார்க்கிற போக்கு உள்ளது. இதனால் ஜாதிய ஆணவப் படுகொலைகள் நிகழ்கின்றன. நமது நாட்டில் ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட ஜாதி ஆணவக் கொலைகள் நடக்கின்றன. ஆனால் இந்த கொலைகளை பெரும்பான்மை சக்திகள் மேற்கொள்கின்றன. ஆகையால் சட்டத்தின் முன்னே இந்த கொலைகள் வந்துவிடாமல் பாதுகாக்கப்படுகின்றன.
ஒடுக்கப்பட்ட மக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிட ஆடைகளை மேலாதிக்க சமூகம் கருவியாக கையாள்கிறது. தனிமனிதர்களின் அடையாளத்தை மேலாதிக்க குழுக்கள் ஒடுக்குகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் கலாசாரம் என்பது மேலாதிக்க சக்திகளால் மட்டுமல்ல, அரசாங்கத்தின் அமைப்புகளாலும் கூட சில நேரங்களில் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றன.
நமது அரசியல் சாசனத்தின் 377-வது பிரிவு ஒருபால் உறவை கிரிமினல் குற்றம் என குற்றம்சாட்டியது. அதை இப்போது உச்சநீதிமன்றம் திருத்தி உள்ளது. ஒரு பால் உறவு என்பது கிரிமினல் குற்றமே அல்ல என திருத்தப்பட்டுள்ளது. இத்தகைய முற்போக்கு அம்சங்களும் சித்தாங்களுமே நம்மை வழிநடத்திச் செல்லக் கூடியவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் உரையாற்றினார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications