மகாராஷ்டிராவில் வெடிக்கும் அதிருப்தி வேட்பாளர்கள் பஞ்சாயத்து! அதிரடி நடவடிக்கை எடுத்த காங். தலைமை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருகிறது. மகா விகாஸ் அகாடி கூட்டணி சார்பாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியிலிருந்து சில அதிருப்தியாளர்கள், சுயேட்சையாக சொந்த கூட்டணிக்கு எதிராக களமிறங்கியுள்ளனர். இதனையடுத்து இவர்கள் அனைவரையும் காங்கிரஸ் சஸ்பெண்ட் செய்திருக்கிறது.

காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை இந்த தேர்தல் வாழ்வா சாவா போராட்டமாகும். ஹரியானாவில் வெற்றி குறித்து மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்த காங்கிரஸுக்கு கடைசியில் தோல்விதான் மிஞ்சியது. இதே நிலைமை மகாராஷ்டிராவில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால், கூட்டணியில் உள்ள உத்தவ் சிவசேனாவுக்கும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கும் தேவையான இடங்களை ஒதுக்கி கொடுத்து பஞ்சாயத்து ஏதும் ஏற்படாமல் சமரச போக்கில் தேர்தலை எதிர்கொண்டு வருகிறது.

maharashtra assembly election 2024 maharashtra 2024

ஆனால், கட்சியின் இந்த யுக்தியை புரிந்துக்கொள்ளாத சில அதிருப்தியாளர்கள், எனக்கு சீட் கொடுக்கவில்லை எனவே சுயேட்சையாக போட்டியிடுகிறேன் என்று களத்தில் குதித்துள்ளனர். இது கூட்டணியினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அதிருப்தி வேட்பாளர்களை கட்சி தலைமை அதிரடியாக சஸ்பெண்ட் செய்திருக்கிறது. சஸ்பெண்ட் பட்டியலில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர முலாக்கும் இருக்கிறார். இவர் ராம்டெக் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

அதேபோல கடோல் தொகுதியில் யாக்ஞவல்கிய ஜிச்கர், கஸ்பா தொகுதியில் கமல், கோப்ரி பச்பகடி தொகுதியில் மனோஜ் ஷிண்டே, பார்வதி தொகுதியில் அபா பாக்யுல் உள்ளிட்டோர் வேட்புமனு செய்திருந்த நிலையில், இவர்கள் அனைவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய புள்ளிகளாக இருக்கின்றனர். இவர்களை தவிர சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களின் பட்டியல் மேலும் நீண்டிருக்கிறது.

இந்த சஸ்பெண்ட் குறித்து கட்சியின் தலைவர் ரமேஷ் சென்னிலதா கூறுகையில், மகா விகாஸ் கூட்டணி வேட்பாளருக்கு எதிராக வேட்புமனு தாக்கல் செய்த அனைத்து அதிருப்தி வேட்பாளர்களும் 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை காங்கிரஸ் கட்சியினரிடையே விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

ஏற்கெனவே லோக்சபா தேர்தலில் மகா விகாஸ் அகாடி கூட்டணி சிறப்பான வெற்றியை பெற்றிருந்தது. ஆனால், இந்த வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் தக்க வைக்க வேண்டும் எனில், அதற்காக சில யுக்திகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக கூட்டணி கட்சியினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும். இதற்கு யார் இடையூறாக வந்தாலும், அது வெற்றியை பாதிக்கும் என்பதால், அவர்களுக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்க தயங்காது என்று காங்கிரஸ் தலைமை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+