கொரோனா: மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரிப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகம்.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் கொரோனாவின் தாக்கம் படுதீவிரமடைந்துள்ளது. இதில் மகாராஷ்டிராவில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

Coronavirus Case- Maharashtra hit 101

இம்மாநிலத்தில் கொரோனாவால் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புனேவில் 2 பேருக்கும் சதாராவில் ஒருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்த்து. இந்த நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கில்...

இதனிடையே இங்கிலாந்தில் இருந்து மணிப்பூர் திரும்பிய 23 வயது இளம்பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் நபர் இந்த பெண்மணி. வடகிழக்கில் பல மாநிலங்களில் பிற மாநிலத்தவர்கள் உள்ளே நுழையவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் குஜராத் மாநிலத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+