நாட்டிலேயே மகாராஷ்டிராவில்தான் கொரோனா உக்கிரம்- 97 பேருக்கு பாதிப்பு
மும்பை: நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனாவின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இம்மாநிலத்தில் கொரோனாவால் 97 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில்தான் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் இதுவரை 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மாலையில் மகாராஷ்டிராவில் 15 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அம்மாநிலத்தில் மொத்தம் 92 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 30க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பஞ்சாப் மாநிலத்தில் 21 பேரும் குஜராத்தில் 18 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications