அதிக வேலை நேரத்தை எதிர்த்ததால் டிஸ்மிஸ்.. கறார் காட்டிய பாட்டாவுக்கு பெரும் அபராதம்.. ஹைகோர்ட்
மும்பை: பாட்டா நிறுவனத்தின் ஷோரூமில் வேலை செய்த ஊழியர்கள், வேலை நேரம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், அந்த ஊழியர்களுக்கு ரூ.33 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மும்பை உயர்நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டிருக்கிறது.
அது 2007ம் ஆண்டு. அப்போது பாட்டா எனும் ஷூ, காலணி தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தில் இயங்கியதாக சொல்லப்பட்டது. எனவே இதனை சமாளிக்க அனைத்து மும்பை, தானே மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள ஷோரூம்களுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியிருந்தது. அதன்படி இனி யாருக்கும் வீக் ஆஃப் எனப்படும் வார விடுமுறை கிடையாது. தினமும் இரவு 9.30 மணிக்குதான் கடையை அடைக்க வேண்டும். இனி இதைத்தான் கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது.

வாரத்தில் 6 நாட்களும் நாளொன்றுக்கு 8 மணி நேரத்திற்கு அதிகமாகவும் வேலை பார்த்து சோர்ந்து போன உடலும், மனமும் 7வது நாளும் உழைக்க மறுத்தது. ஷோரூமில் வேலை செய்த சேல்ஸ்மேன்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினர். அவ்வளவுதான், இவர்கள் அனைவரையும் பாட்டா நிர்வாகம் கழுத்தை பிடித்து வெளியில் தள்ளியது. இனி யாருக்கும் வேலையில்லை என்று கூறிவிட்டது. வயிற்று பிழைப்புக்காக இருந்த கொஞ்ச நஞ்ச சம்பளம் கொடுத்த வேலையும் போய்விட்டதே என புலம்பிய தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தில் முறையிட்டனர்.
தொழிற்சங்கத்தினர், தொழிலாளர் நடைமுறைகள் சட்டம் 1971 (MRTU & PULP சட்டம்) பிரிவு 28(1) இன் கீழ் தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேல்ஸ்மேன்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக கூறி, பாதி சம்பளத்துடன் மீண்டும் பணியமர்த்த உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து சேல்ஸ்மேன்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். அதில், தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லையென்றும் 100% ஊதியத்துடன் பணியமர்த்தப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.
ஆனால் பாட்டா இவர்களுக்கு எதிராக மற்றொரு மனுவை தாக்கல் செய்தது. அதாவது சேல்ஸ்மேன்கள் என்பவர்கள் தொழிலாளர்கள் கிடையாது என்றும், எனவே தொழிலாளர் நலச்சட்டங்கள் இவர்களுக்கு பொருந்தாது எனவும் கூறியது. மட்டுமல்லாது இவர்களை பாதி சம்பளத்தில் வேலைக்கு எடுக்கவும் மறுப்பு தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சேல்ஸ்மேன்கள் என்பவர்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களை நிறுவனத்தின் பொருட்களை வாங்க வைக்க பாடுபடுகிறார்கள். எனவே அவர்களும் தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு தொழிலாளர் நலச்சட்டம் பொருந்தும் என்று உத்தரவிட்டது.
அதேபோல இந்த சம்பவம் நடைபெற்று 17 ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது வழக்கு தொடுத்தவர்கள் மீண்டும் அதே பணியை செய்யும் சூழலில் இல்லை. எனவே கடந்த 17 ஆண்டுகளாக அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியத்தில் 75 சதவிகிதத்தை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதாவது இவர்கள் கடைசியாக வாங்கிய ஊதியத்தை கணக்கிட்டு இந்த தொகை வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை மொத்தம் 7 பேர் தொடுத்திருந்தனர். இவர்களுக்கு ரூ.19.5 லட்சம் முதல் ரூ.33 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும். அதேபோல இழப்பீடை 4 மாதத்திற்குள் வழங்க வேண்டும். ஒருவேளை தவறும் பட்சத்தில் அதற்கு 8 சதவிகிதம் வரை வட்டி விதிக்க்பபடும் என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications