இரவோடு இரவாக நாடு கடத்தப்படும் ‛கேங்ஸ்டர்’.. சீனாவில் இருந்து இந்தியா வரும் ‛தாதா’ பிரசாத் பூஜாரி

Subscribe to Oneindia Tamil

மும்பை: இந்தியாவில் நிழல் உலக தாதாவாக வலம் வந்த பிரசாத் பூஜாரி சீனா பெண்ணை திருமணம் செய்து அங்கேயே பதுங்கிய நிலையில் இன்டர்போல் மூலம் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் பல சவால்களை கடந்து பிரசாத் பூஜாரி சீனாவில் இருந்து இன்று இரவு நாடு கடத்தப்ட்டு இந்தியா கொண்டு வரப்பட உள்ளார்.

இந்தியாவில் தொழிலதிபர்கள் உள்பட பிரபலமான நபர்களை மிரட்டி பணம் பறிப்பது, கொலை, கொலை முயற்சி உள்பட பல வழக்ககளில் தொடர்புடையவர் பிரசாத் பூஜாரி. நிழல் உலக தாதாவாக அறியப்படும் இவர் மீது பல மாநிலங்களில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

கடந்த 20 ஆண்டுகளாக பிரசாத் பூஜாரி மீது பல வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்நிலையில் தான் அவர் இந்தியாவில் இருந்த வெளியேறி தலைமைறைவார். அவர் வெளிநாடுகளில் வசிக்க தொடங்கினர். இருப்பினும் மும்பை குற்றப்பிரிவு போலீசார் பிரசாத் பூஜாரியை கைது செய்யும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

crime-branch-police-deports-gangster-prasad-pujari-and-he-will-be-brought-to-india-from-china

இந்நிலையில் தான் பிரசாத் பூஜாரியை சீாவை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதும், அவர்களுக்கு குழந்தை இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையோ கடந்த ஆண்டு ஹாங்காங்கில் இன்டர்போல் மூலம் சீன அதிகாரிகளால் பிரசாத் பூஜாரி கைது செய்யப்பட்டார். ஹாங்காங்கில் இருந்து ஷென்சென் நகருக்கு விமான பயணம் மேற்கொள்ள முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.

இதுபற்றி இந்தியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் பிரசாத் பூஜாரியை நாடு கடத்தி வருவதற்கான பணிகளை மும்பை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக மேற்கொண்டு வந்தனர். மேலும் சீனாவில் இருந்து அவரை நாடு கடத்த அந்நாட்டு அரசும் ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் தான் இன்று இரவு பிரசாத் பூஜாரியை மும்பை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விமானத்தில் மும்பைக்கு நாடு கடத்தி வர உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+