மகா. மாஜி முதல்வர் பட்னாவிஸுக்கு போதை பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு: அமைச்சர் நவாப் மாலிக் பகீர்
மும்பை: மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுக்கு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதாக அம்மாநில அமைச்சரும் மூத்த தேசியவாத காங்கிரஸ் தலைவருமான நவாப் மாலிக் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார். அத்துடன் இதற்கான ஆதாரங்களாக போட்டோக்களையும் நவாப் மாலிக் வெளியிட்டுள்ளார்.
மும்பையில் இருந்து கடந்த 3-ந் தேதி கோவாவுக்கு புறப்பட்ட சொகுசு கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அக்கப்பலில் போதைப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது ஆர்யன்கான் உள்ளிட்டோர் ஜாமீனில் விடுதலையாகி உள்ளனர்.
இந்த விவகாரம்தான் கடந்த சில வாரங்களாக மகாராஷ்டிரா அரசியலில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. மும்பை மண்டல போதைப் பொருள் தடுப்பு அதிகாரி சமீர் வான்கடே, திட்டமிட்டே பொய் வழக்குகளை பதிவு செய்வதாக அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக வழக்குகளும் சமீர் வான்கடே தரப்பில் தாக்கல் செய்யப்பட்டன.

பாஜக தூண்டுதலும் சமீர் வான்கடேவும்
மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தூண்டுதலால்தான் சமீர் வான்கடே பொய் வழக்கு போடுகிறார்; மும்பை பாலிவுட்டை உத்தரப்பிரதேசவூட்டாக மாற்றும் சதித் திட்டத்தின் ஒருபகுதிதான் இந்த வழக்குகள் எல்லாம் என இடைவிடாமல் குற்றம்சாட்டி வருகிறார் நவாப் மாலிக். இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வரான பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் குறித்தும் அதிரடி குற்றச்சாட்டுகளை நவாப் மாலிக் முன்வைத்துள்ளார்.

பொய் வழக்குகள்
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் நவாப் மாலிக் கூறியதாவது: முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சியில்தான் போதைப் பொருள் கடத்தல் மகாராஷ்டிராவில் தலைதூக்கியது. பட்னாவிஸ்தான் சமீர் வான்கடேவை மும்பை ஜோனல் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரியாக நியமித்தார். பட்னாவிஸ் தூண்டுதலில்தான் பொய்யான வழக்குகளை ஜோடித்து வருகிறார் சமீர் வான்கடே.

பட்னாவிஸ்- போதைப் பொருள் கடத்தல் கும்பல் லிங்க்
தேவேந்திர பட்னாவிஸுக்கும் தற்போது போதைப் பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் இருக்கும் ஜெயதீப் ரானாவுக்கும் தொடர்பு உள்ளது. இதற்கான போட்டா ஆதாரங்களை உங்களிடம் கொடுத்திருக்கிறேன். பட்னாவிஸின் மனைவி அம்ரிதா பட்னாவிஸ் ஆல்பத்துக்கு பைனான்சியரே ஜெயதீப் ரானாதான். இருவரும் இணைந்து போஸ் கொடுக்கும் போட்டோக்களும் இருக்கின்றன. சமீர்வான்கடேதான் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டவர். மும்பை போதைப் பொருள் கடத்தலின் சூத்திரதாரியே சமீர் வான்கடேதான். இவ்வாறு நவாப் மாலிக் கூறினார்.

பட்னாவிஸ் பதிலடி
இதனிடையே இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக பதில் அளித்த பட்னாவிஸ், நவாப் மாலிக்குக்கும் நிழல் உலக தாதாக்களுக்கும் தொடர்பு உள்ளன. இது தொடர்பான ஆதாரங்களை தீபாவளி பண்டிக்கைக்குப் பின்னர் வெளியிடுகிறேன். ஆட்டத்தை தொடங்கி வைத்தது அவர்தான்.. என்ன நடக்கிறது என தீபாவளிக்கு பிறகு பாருங்கள் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications