சின்ன வயசில் என்னிடம் தவறாக நடந்து கொண்ட டியூஷன் ஆசிரியர்.. பிரபல நடிகை பரபரப்பு தகவல்
மும்பை: டியூசன் ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பிளிப்கார்ட்டின் லேடீஸ் வெர்சஸ் ஜென்டில்மமேன் சீசன் 2 நிகழ்ச்சியில் நடிகை தேவோலீனா பட்டர்ஜி தெரிவித்தார்.
பிரபல இந்தி சீரியல் நடிகை மற்றும் பரத நாட்டியக் கலைஞர் தேவோலீனா பட்டர்ஜி. இவர் சமீபத்தில் தனக்கு சிறுவயதில் ஏற்பட்ட பாலியல் வன்முறை குறித்து பரபரப்பான கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் பிளிப்கார்ட்டின் லேடீஸ் ஜென்டில்மேன் சீசன் 2 நிகழ்ச்சியில் தேவோலீனா பட்டர்ஜி கூறுகையில், நான் சிறு வயதில் கணிதப் பாடப்பிரிவுக்காக டியூஷன் சென்றேன்.

டியூஷன்
அவர் மிகவும் சிறந்த ஆசிரியராக இருந்தார். எல்லோரும் அவரிடம் டியூஷனுக்கு செல்வார்கள். நானும் எனது இரு நண்பர்களும் அவரிடம் டியூஷன் சென்றோம். திடீரென ஒரு வாரம் அவர்கள் இருவரும் வரவில்லை. டியூஷன் வருவதையே நிறுத்திக் கொண்டனர். இதற்கு எனக்கு எந்த காரணமும் தெரியவில்லை.

அம்மா
அதனால் நான் மட்டும் அவரிடம் டியூஷன் சென்றேன். அப்போது அந்த ஆசிரியர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். இதையடுத்து வீட்டுக்கு வந்தவுடன் அம்மாவிடம் சொல்லிவிட்டேன். நாங்கள் ஆசிரியரின் வீட்டுக்குச் சென்று அவரின் மனைவியிடம் புகார் அளித்தோம். ஆனால்நான் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைத்தேன்.

சமுதாயம்
ஆனால் எனது பெற்றோர் அதற்கு சம்மதிக்கவில்லை. இது சமுதாயத்திற்கும் அனைத்து பெற்றோருக்குமான எனது அறிவுரை. உங்கள் பிள்ளைகள் இது போன்ற துன்பங்களை எதிர்கொள்ளும் போதெல்லாம் தயவு செய்து நடவடிக்கை எடுங்கள். அந்த இரு நண்பர்களும் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அதை எனக்கு கூட தெரிவிக்கவில்லை.

தேவோலீனா
ஒரு வேளை என்னிடம் சொன்னால் இந்த சமூகம் என்ன சொல்லும், மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என நினைத்தார்களோ என்னவோ தெரியவில்லை என தேவோலீனா தெரிவித்துள்ளார். இவர் நடிகர் சல்மான் கான் நடத்தி வரும் பிக்பாஸ் சீசன் 15 ரியாலிட்டி ஷோவில் அண்மையில் வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் உள்ளே நுழைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்!












Click it and Unblock the Notifications