அம்பானி மகன்னா சும்மாவா? பிள்ளையாருக்கே "தங்க கிரீடம்" தந்த ஆனந்த்.. 20 கிலோ எடையுடன்.. விலையை பாருங்க
மும்பை: அம்பானி வீட்டு நிகழ்வு எதுவானாலும், அது மீடியாவில் பரபரப்பாக மட்டுமல்லாமல் ஆச்சரியமாகவும் பேசப்பட்டுவிடும். இப்போதும் அப்படித்தான் ஒரு விஷயம் இணையத்தில் பரவி, பலருக்கும் திகைப்பை உண்டுபண்ணி வருகிறது.
அம்பானி வீட்டில் எந்த நிகழ்வு என்றாலும், அது உலக மக்களேயே திரும்பி பார்க்க வைத்துவிடும்.. அந்த அளவுக்கு ஆடம்பரமாகவும், பிரம்மாண்டமாகவும் கோடிக்கணக்கில் ஒவ்வொரு நிகழ்வும் அம்பானி குடும்பத்தினர் நடத்துவது வழக்கமாகும்.

கடந்த மாதம் அம்பானி மகன், ஆனந்த் அம்பானி மறுறும் ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் மும்பையில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.. இந்த திருமணத்துக்கு, கிட்டத்தட்ட 5,000 கோடி ரூபாயை அம்பானி செலவு செய்ததாகவும், திருமணத்துக்கு பரிசுப்பொருட்கள் அதற்குமேல் விலை உயர்ந்திருந்ததாக கூறப்பட்டது.
அதிக கவனம்: கடந்த வாரம் வாரம் முழுவதுமே அம்பானி வீட்டு மேக்கப்மேன் மிக்கி என்பவர் இணையத்தில் பிரபலமானார்.. அம்பானி குடும்பத்தினரின் அழகிய தோற்றத்திற்கு முக்கிய காரணமே, மிக்கி கான்ட்ராக்டர் என்ற ஒப்பனைக் கலைஞர்தானாம்.. இவர்தான் அவர்களது "குடும்ப மேக்கப்மேன்"
30 வருடமாக அனுபவமுள்ள மிக்கி, முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, மகள் இஷா அம்பானி, மருமகள் ஷ்லோக் மேத்தா இவர்களுக்கெல்லாம் மிக்கிதான் மேக்கப் கன்ட்ராக்டராக உள்ளார். ஒரு சிட்டிங்கிற்கு 1 லட்சம் வாங்கி வந்த மிக்கி கான்ட்ராக்டர், இப்போது ஒரு நாளுக்கு ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் வசூலிக்கிறாராம்.. சிலசமயம், மேக்கப் செய்ய 7.5 லட்சம் பெறுகிறாராம்.
மேக்கப்மேன்: இந்த மேக்கப்மேன் விவகார பரபரப்பு ஓரளவு முடிந்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தி பிரம்மாண்டம் துவங்கிவிட்டது.. மும்பையில் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தி விழா 10 நாள்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.. இந்த முறையும் பண்டிகையை சிறப்பிக்க, கடந்த 10 நாட்களுக்கு முன்பே மும்பை மும்முரமாகிவிட்டது.
மும்பையில் உள்ள லால்பாக்சா ராஜா (Lalbaugcha Raja) விநாயகரை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.. இங்குதான், அதிக பக்தர்கள் குவிவதும் வழக்கமாகும்... இன்று லால்பாக்சா ராஜா பக்தர்களின் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருக்கிறது.
ராட்சத கிரீடம்: இந்த கோயிலுக்கு வந்தவர்கள், "லால்பாக்சா ராஜா" விநாயகரை கண்டு ஆச்சரியத்துடன் மலைத்து பார்த்தனர்.. காரணம், 15 கோடி மதிப்புள்ள ராட்சத கிரீடம் அணிவிக்கப்பட்டு காட்சியளிக்கிறார் லால்பாக்சா ராஜா..
இதற்கு காரணம் சாட்சாத் அம்பானி மகன் ஆனந்த் அம்பானிதான். லால்பாக் ராஜாவிற்கு 15 கோடி மதிப்புள்ள 20 கிலோ தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தியிருக்கிறார் ஆனந்த் அம்பானி. கடந்த 15 வருடங்களாகவே, விநாயகர் சதுர்த்தியின்போது தனது குடும்பத்தோடு வந்து லால்பாக் ராஜாவை தரிசனம் செய்வது ஆனந்த் அம்பானியின் வழக்கமாகும்.
வைரல் வீடியோ: இப்போது திருமணம் முடிந்துள்ளதால், 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 20 கிலோ தங்கத்தில் தயாரிக்கப்பட்ட கிரீடத்தை லால்பாக் ராஜாவிற்கு காணிக்கையாக்கி இருக்கிறார்.
இந்த கிரீடம் அணிவிக்கப்பட்ட லால்பாக் ராஜாவை பக்தர்கள் தரிசனம் செய்ததுடன், வீடியோ, போட்டோக்களையும் எடுத்து வருகிறார்கள்.. லால்பாக் ராஜாவின் இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அம்பானி குடும்பத்தில் எது நடந்தாலும் அது வைரல்தான் போல..!!
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications