பாப் பாடகி ரிஹான்னா முதல் மார்க் ஜூகன்பர்க் வரை! ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங்கில் பங்கேற்போர் யார்?
மும்பை: குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடைபெறும் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்சன்ட்டின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு (pre wedding) எந்தெந்த விஐபிகள் வருகிறார்கள் தெரியுமா?
இந்திய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இவருடன் படித்த தோழி ராதிகா மெர்சன்ட்டை மணக்கிறார்.

இருவரும் காதலித்து வந்த நிலையில் பெற்றோர் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19ஆம் தேதி மும்பையில் கோல் தானாவில் நடந்தது.
இந்த நிலையில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் வரும் மார்ச் 1, 2, 3 ஆகிய தேதிகளில் குஜராத்தின் ஜாம்நகரில் நடைபெறுகிறது. இங்கு அவர்களுக்கு சொந்தமாக அம்பானி க்ரீன் எனர்ஜியில் நடைபெறுகிறது. இதற்காக ஜாம் நகரே விழாக்கோலம் பூண்டுள்ளது.
இந்த திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளுக்கு யார் யார் வருகிறார்கள் தெரியுமா? ஷாருக் கான், ரஜினிகாந்த், சல்மான் கான், ஆமீர் கான், சித்தார்த் மல்ஹோத்ரா, சைப் அலிகான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். ஜாம்நகரில் பாலிவுட், கோலிவுட், நட்சத்திரங்கள் ஒன்றாக சந்திக்கும் அரிய நிகழ்வு இதுவாக இருக்கக் கூடும் என்கிறார்கள்.
சர்வதேச நிகழ்வுகளுக்கு எந்த வித குறைவும் இல்லாமல் ஜாம் நகரில் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. ஜாம் நகர் வண்ண விளக்குகளால் மின்னுகிறது. இந்த கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் அர்ஜித் சிங் மற்றும் அஜய் அதுல் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
அது போல் உலக புகழ் பெற்ற பாப் பாடகியான ரிஹான்னா, இந்த விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். இந்த விழாவுக்கு 1000 க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் வருகை தருகிறார்கள். அதில் பேஸ்புக் தலைவர் மார்க் ஜூகன்பெர்க், மைக்ரோ சாப்ட் முன்னாள் சிஇஓ பில் கேட்ஸ், அவருடைய முன்னாள் மனைவி மெலிந்தா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இந்த விழாவில் கலந்து கொள்ளும் நட்சத்திரங்களுக்கு டிரெஸ் கோட், பார்ட்டி தீம் எல்லாம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனவாம். இந்த நிகழ்ச்சியில் ஷாருக் கான் நடனமாடுகிறார். இதற்கு அவர் ஜாம் நகர் சென்று விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். ஷாருக் கான், திருபாய் அம்பானியின் சர்வதேச பள்ளியில்தான் படித்தார். அண்மையில் கூட பிள்ளையார் சதுர்த்தி விழாவில் தனது மனைவி கவுரியுடன் ஷாருக் கான் கலந்து கொண்டிருந்தார்.
தனது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் என்பது தனது வீட்டில் தற்போது நடைபெறும் கடைசி திருமணம் என்பதால் இந்த விழாவை விமரிசையாக செய்ய முகேஷ் அம்பானியும் நீடா அம்பானியும் முடிவு செய்துள்ளனராம். முகேஷ் - நீடா தம்பதியின் மூத்த மகன் ஆகாஷ், மகள் ஈஷா ஆகியோருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் தற்போது இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு திருமணம் நடைபெறுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications