பணக்கார நடிகை யார்? ரூ. 4,600 கோடி சொத்து! இளம் நடிகைகளை கீழே தள்ளிய பழைய நடிகை
மும்பை: இன்றைய பாலிவுட் சினிமாவில் உச்ச நடிகை வலம் வரும் யாரும் இந்தியாவின் பணக்கார நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிக்காத நிலையில், 90களில் பெரிய நடிகையாக வலம் வந்த ஒருவர் அந்த இடத்தைப் பிடித்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்தியாவின் பணக்கார நடிகை யார்? என்று ஒரு கேள்வியைக் கேட்டால் பலரும் உடனே ஐஸ்வர்யா ராயை சொல்வார்கள். அப்படி இல்லை என்றால் தீபிகா படுகோனை சொல்வார்கள். சிலர் பிரியங்கா சோப்ரா என்றும் சொல்ல வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அதிக சம்பளம் வாங்கும் இந்த நடிகைகள்தான் இன்றைய பாலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள். ஆகவே அவர்கள் பெயரைச் சொடக்குப் போடும் நேரத்தில் சினிமா ரசிகர்கள் கண்டுபிடித்துச் சொல்வதில் ஆச்சரியம் ஒன்றுமே இல்லை.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், இன்றைக்கு அதிக சம்பளம் பெற்றுவரும் எந்த நடிகையும் இந்தியாவின் பணக்கார பட்டியலில் இல்லை என்பதுதான். அப்படி என்றால் யார் அவர்? கிட்டத்தட்ட 4,600 கோடிக்கு அதிபதியான அவர் இன்றைக்கு சினிமா உலகின் கேமிரா ஸ்பாட் லைட் அவர் மீது விழும் அளவுக்கு இல்லை. அவரை யாரும் ஹீரோயினாக போட்டு படம் எடுக்கும் அளவுக்கு அவர் இளமையாகவும் இல்லை.
ஆனால், கடந்த தலைமுறையைக் கேட்டால் அவர் பெயரை அடித்துச் சொல்வார்கள். அழகிகளின் பட்டியலில் அவர் நிச்சயம் இடம்பிடித்துவிடுவார். அப்படியான நடிகை யார் என இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லையா? அவருக்கு ஷாருக்கானுக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. அதை வைத்து உங்களால் யூகிக்க முடிகிறதா? எஸ்! அவரேதான். பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் அல்லது ஆலியா பட் போன்ற நடிகைகளை எல்லாம் ஓரங்கட்டி விட்டு 2024 Hurun வெளியிட்டுள்ள பணக்கார இந்திய நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார் இந்த 90களின் நடிகை ஜூஹி சாவ்லா.

இவர் தனது வருமானத்தை மட்டுமே வைத்து இந்த இடத்தை அடையவில்லை. பல பிராண்டுகளில் முதலீடு செய்தது, வெப் சீரிஸ்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் நடிப்பது, இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அணியின் இணை உரிமையாளராக வலம் வருவது, படங்களை தயாரித்து வெளியிடுவது எனப் பல துறைகளில் தொழிலதிபராக வலம் வருவதால் இந்த உயரத்தை அவர் எட்டிப் பிடித்துள்ளார். இத்தனையையும் தாண்டி இவர் தொழிலதிபர் ஜே மேத்தாவுடன் இணைந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அது ஒரு பக்கம் பணமழை பொழிந்து வருகிறது.
கடந்த 2008 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உரிமையைப் பெற ஷாருக்கானுடன் ஜூஹி சாவ்லா கூட்டு சேர்ந்து வாங்கினார். இந்தப் பணக்கார பட்டியலில் ஷாருக்கான் 7,300 கோடி ரூபாய் நிகர மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார். ஹிருத்திக் ரோஷன் (ரூ 2,000 கோடி), அமிதாப்பச்சன் (ரூ 1,600 கோடி), மற்றும் கரண் ஜோஹர் (ரூ 1,400 கோடி) என அடுத்த வரிசையில் இடம்பிடித்துள்ளனர்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி குறிப்பின்படி, ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்தியாவின் இரண்டாவது பணக்கார நடிகையாக இடம்பிடித்துள்ளார். இவரது நிகர சொத்து மதிப்பு ரூ.850 கோடி. அடுத்து 650 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடத்தில் உள்ளார். பாலிவுட், ஹாலிவுட் எனக் கலக்கி வரும் சோப்ரா தனது வருமானத்தை ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்தார். படங்களை தயாரித்தார். மற்றும் பல பிராண்ட்டுகளில் ஒப்பந்தங்களைச் செய்து பணக்காரர் பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
ஆலியா பட், தீபிகா ஆகியோர் முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ளனர். தி எகனாமிக் டைம்ஸ் தரவுகளின்படி, அலியா பட் ரூ.550 கோடிக்கு மேல் சொத்து மதிப்பு பெருக்கியுள்ளார். தீபிகா படுகோனின் நிகர மதிப்பு சுமார் ரூ. 500 கோடி என மணிகண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தியின் மூலம் தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications