எல்லாத்துக்கும் ’அவர்’ தான் காரணம்! நான் சிஎம் ஆனதுக்கு காரணமே ‘விதி’தான்! உருகிய ஏக்நாத் ஷிண்டே..!
மும்பை : பல்வேறு அரசியல் சர்ச்சைகளுக்கு பிறகு மகாராஷ்டிரா முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி தனக்கு கிடைத்தது விதியால் நடந்தது எனவும் பாஜக எனக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது என எனக் கூறியுள்ளார்
கடந்த பாஜகவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலை சந்தித்த சிவசேனா, அதன்பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து மகா விகாஷ் அகாடி என்ற பெயரில் ஆட்சியமைத்த நிலையில், முதல்வராக பால் தாக்கரேவின் மகன் உத்தவ் தாக்கரே இருந்தார்.
இரண்டு ஆண்டுகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்று கொண்டு இருந்த நிலையில் சிவசேனாவின் முக்கிய தலைவர்களை ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் 40 எம்எல்ஏக்கள் திரண்டு அக்கடி கூட்டணிக்கு வழங்கிய ஆதரவை திரும்பப் பெறுவதாக அதிரடியாக கூறினர்

உத்தவ் தாக்கரே ராஜினாமா
இதனிடையே நடந்த பல்வேறு கட்ட அரசியல் நகர்வுகளுக்குப் பிறகு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்னதாகவே மகாராஷ்டிரா முதல்வர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதனை அடுத்து ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதல்வராக பதவி ஏற்றுள்ள நிலையில் நாளை மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான பணிகளில் பாஜக மற்றும் சிவசேனா சட்டமன்ற உறுப்பினர்கள் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஏக்நாத் ஷிண்டே முதல்வர்
இந்நிலையில் முதல்வராகப் பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவி தனக்கு கிடைத்தது விதியால் நடந்தது எனவும் பாஜக எனக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்தது என எனக் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,"தற்போது தற்போது தனக்கு ஆதரவு வழங்கியுள்ள எந்த ஒரு சிவசேனா சட்டமன்ற உறுப்பினரையும் தன்னுடன் வருமாறு தான் வற்புறுத்திக் கூப்பிடவில்லை, உத்தவ் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர்களாகவே தன்னிடம் வந்துள்ளனர். தற்போது ஒன்று கூடி உள்ள நாங்கள் அனைவரும் பாலசாகிப் தாக்கரே கண்ட கனவை நிறைவேற்றுவோம். மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்டனாவிஸ் தான் முதல்வராக பதவியேற்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

பாஜகவுக்கு நன்றி
அதே நேரத்தில் நானும் முதல்வர் பதவியை வகிக்க வேண்டும் என விரும்பவில்லை ஆனால் விதி நான் முதல்வராகுமாறு செய்துள்ளது பாரதிய ஜனதா கட்சி எனக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்துள்ளது அந்தக் கட்சி ஜனநாயகத்தை மதிக்கிற கட்சி. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன். தற்போது மகாராஷ்டிராவில் பதவி ஏற்க இந்த ஆட்சி பால் தாக்கரேவின் அரசாக இருக்கும் என்பதை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் எனக் கூறியுள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ் உறுதி
இதனைத் தொடர்ந்து பேசிய மகராஷ்டிர மாநில துணை முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ்," தற்போது மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள ஆட்சி பாஜகவும் சிவசேனாவும் சேர்ந்து அமைத்துள்ள ஆட்சி. நாங்கள் மகராஷ்டிர மக்களின் நலனுக்காக தொடர்ந்து ஒன்றாக பணி செய்வோம். முதல்வராக பதவியேற்றுள்ள ஏக்நாத் ஷிண்டேவுடன் இருப்பவர்கள் தான் உண்மையான சிவசேனாவின் தொண்டர்கள். மகாராஷ்டிராவில் தற்போது புதிய வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது " எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications