டூட்டி நேரம் ஓவர்.. விமானத்தை இயக்க மறுத்த பைலட்! ஏர்போர்ட்டில் தவித்த மகாராஷ்டிரா துணை முதல்வர்
மும்பை: மகாராஷ்டிராவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற துணை முதல்வர் ஏக்னாத் ஷிண்டே மீண்டும் திரும்புவதற்காக ஜல்கான் விமான நிலையத்திற்கு வந்துள்ளார். இரவு 9.15 மணிக்கு அவர் மற்றும் அவரது சக அமைச்சர்கள் வந்த நிலையில், விமானி விமானத்தை இயக்க மறுத்துள்ளார். தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகவும் இதற்கு மேல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்றும் கூறியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா துணை முதல்வர் சிறிது நேரம் விமான நிலையத்தில் காத்துநிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். மாநிலம் முழுக்க பல்வேறு நிகழ்ச்சிகளிலும் ஏக்னாத் ஷிண்டே கலந்து கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

டூட்டி டைம் முடிந்துவிட்டது
அந்த வகையில், ஏக்நாத் ஷிண்டே நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஜல்கான் சென்றார். ஜல்காவில் இருந்து திரும்பும் போது விமானத்தை விமானி இயக்க மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்த விவரம் வருமாறு:-
மகாராஷ்டிராவில் உள்ள ஜல்கான் நகரில் மத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஏக்நாத் ஷிண்டே மும்பையில் இருந்து ஜல்கான் புறப்பட்டு சென்றார். மாலை 3.45 மணிக்க்கு நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், இரண்டு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு ஏக்நாத் ஷிண்டே வருகை தந்தார். பின்னர் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஏக்நாத் ஷிண்டே தனி விமானத்தில் மும்பைக்கு திரும்ப இருந்தார்.
இரவு 9.15 மணிக்கு ஜல்கான் விமான நிலையத்தில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது சக அமைச்சர்கள் வருகை தந்தனர். எனினும், தனது பணி நேரம் முடிந்துவிட்டதாகவும் இதற்கு மேல் தன்னால் விமானத்தை இயக்க முடியாது என்று விமானி கூறியுள்ளார். தனது பணி நேரம் முடிந்துவிட்டதால், மீண்டும் ஒப்புதல் பெற வேண்டும் எனவும், இதற்கு சிறிது அவகாசம் தேவைப்படும் என்றும் விமானி கூறியிருக்கிறார்.
பெண்ணுக்கு உதவிய ஏக்னாத் ஷிண்டே
அதுமட்டும் இன்றி தனது உடல் நலனை காரணம் காட்டி, விமானத்தை இயக்க முடியாது என்றும் விமானி கூறினார். எனினும்,ஏக்நாத் ஷிண்டேவுடன் வந்த அமைச்சர்களான மகாஜன், பாட்டீல் ஆகியோர் விமானியை விமானத்தை இயக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உடனடியாக விமானத்தை இயக்குவதற்கான அனுமதியும் பெற்றுள்ளார். இதன்பிறகே, அந்த விமானி இயக்க சம்மதம் தெரிவித்துள்ளார்.
ஏக்நாத் ஷிண்டேவுடன் விமானத்தில், அவசரமாக மருத்துவ சிகிச்சை தேவைப்பட்ட பெண்ணும் பயணம் செய்துள்ளார். ஷீடால் பாடீல் என்ற பெண் மும்பைக்கு தனது கணவருடன் செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால், அந்த பெண் தனது விமானத்தை தவறவிட்டுவிட்டாராம். இது குறித்த தகவல் அமைச்சர் மகாஜனுக்கு கிடைத்துள்ளது. உடண்டியாக ஷின்டே பயணம் செய்ய இருந்த தனி விமானத்தில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்தார்.
கஷ்டங்களை இன்னும் மறக்கவில்லை
அதுமட்டும் இன்றி அந்த பெண் விமான நிலையத்தில் தரையிறங்கியதும் உடனடியாக அழைத்து செல்ல மும்பையில் ஆம்புலன்ஸ் ஒன்று தயார் நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஏக்நாத் ஷிண்டேவின் இந்த செயல் சாதாரண மக்களுக்கு உதவி அளிக்கும் அவரது எண்ணத்தை காட்டுவதாக அமைச்சர் மகாஜான் கூறினார்.
இது குறித்து மகாராஷ்டிரா அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் கூறுகையில், "ஏக்நாத் ஷிண்டே தனது இளமை காலத்தில் பட்ட கஷ்டங்களை இன்னும் மறக்கவில்லை. சாதாரண மனிதர்கள் மீது அவர் கருணை காட்டுகிறார்" என்றார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications