மிகப் பெரிய மனதுடன் எனக்கு முதல்வர் பதவியை தாரை வார்த்து கொடுத்தது பாஜக.. நெகிழ்ந்த ஏக்நாத் ஷிண்டே
மும்பை: மிகப் பெரிய மனதுடன் தமக்கு முதல்வர் பதவியை பாஜக தாரைவார்த்து கொடுத்ததாக மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
மகாராஷ்டிராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசின் முதல் சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது.
சபாநாயகர் தேர்தலில் போட்டியிட்ட பாஜகவின் ராகுல் நர்வேகர் 164 வாக்குகளையும் சிவசேனா சார்பில் போட்டியிட்ட ராஜன் சால்விக்கு 107 வாக்குகளும் கிடைத்தன. இதனைத் தொடர்ந்து சட்டசபையில் புதிய சபாநாயகர் ராகுல் நர்வேகருக்கு அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியதாவது: உண்மையான சிவசேனா- பாஜக ஆட்சியை அமைத்துள்ளோம். பால்தாக்கரேவின் கனவுகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். பால் தாக்கரேவின் மிக சாதாரண தொண்டனால் இதனை சாதிக்க முடிந்துள்ளது என்பது பெருமைக்குரியது.
ஆனால் ஒருதரப்பு சொன்னது (உத்தவ் தாக்கரே தரப்பு).. 5 எம்.எல்.ஏக்களுடன் தொடர்பில் இருக்கிறோம் என தொடங்கி.. 25 எம்.எல்.ஏக்கள் திரும்பி வருவார்கள் என்றனர்.. ஆனால் பாஜகவுக்கு 115 எம்.எல்.ஏக்கள்; எங்களுக்கு 50 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்பதை இன்று நிரூபித்துவிட்டோம்.
பாஜகவினர் மிகப் பெரிய மனதுடன் எனக்கு முதல்வர் பதவியை வழங்கி உள்ளனர். தேவேந்திர பட்னாவிஸ், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு மிக்க நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு ஏக்நாத் ஷிண்டே கூறினார். இன்றைய சபாநாயகர் தேர்தல் வாக்குப் பதிவின் போது சமாஜ்வாதி, மஜ்லிஸ்ட் கட்சியினர் வாக்களிக்கவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications