ஷிண்டே VS உத்தவ் தாக்கரே.. மகாராஷ்டிராவில் மாஸ் காட்டியது யார்? இருவரும் வென்ற தொகுதிகள் எத்தனை?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜக மட்டும் 120க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை பெற்று தனிப்பெறும் கட்சியாக மீண்டும் உருவாகி உள்ள நிலையில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா மற்றும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா ஆகியவற்றின் வேட்பாளர்கள் எத்தனை தொகுதிகளில் வென்றனர்? யார் அதிக இடங்களில் வென்றனர்? என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தம் 288 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க ஒரு கட்சி 145 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 20ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.

election results 2024 maharashtra assembly election 2024 shiv sena 2024

இதில் ஆளும் கட்சி கூட்டணியில் பாஜக, முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒன்றாக களமிறங்கின. மறுபுறம் எதிர்க்கட்சியான மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ், உத்தவ் தாக்கேரவின் சிவசேனா, அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.பாஜக கூட்டணி மொத்தமாக 230 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆளும் கூட்டணியில் பாஜக மட்டும் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக மாறியது. மேலும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 57 இடங்களிலும், அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஆளும் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வாகை சூடி அசத்தி உள்ளது.

மறுபுறம் எதிர்க்கட்சியான ‛மகா விகாஸ் அகாடி' என்ற பெயரில் கூட்டணி அமைத்ததில் காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த கூட்டணியில் இடம்பெற்றுள்ள உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதன்மூலம் பாஜக கூட்டணி ஆட்சி தான் என்பது மகாராஷ்டிராவில் உறுதியாகி உள்ளது.

மேலும் இந்த தேர்தலில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா தான் 57 வெற்றி பெற்றுள்ளது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 20 இடங்களில் வாகை சூடியுள்ளது. இதன்மூலம் கட்சி மற்றும் சின்னத்தை உத்தவ் தாக்கரேவிடம் இருந்து ஏற்கனவே பிடுங்கிய ஏக்நாத் ஷிண்டே தற்போது உத்தவ் தாக்கரேவை மீண்டும் தேர்தல் அரசியலில் வீழ்த்தி உள்ளார்.

இருப்பினும் இந்த முறை ஏக்நாத் ஷிண்டேவுக்கு முதல்வர் பதவி என்பது கிடைக்காது. பாஜக அதிக இடங்களில் வென்றதால் அந்த கட்சியின் தேவேந்திர பட்னாவிஸ் தான் முதல்வராக்கப்படுவார் என்று சொல்லப்படுகிறது. அதேபோல் தான் இந்த தேர்தலில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்ற நிலையில் , சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

தேசியவாத காங்கிரஸ் கட்சியை சரத்பவார் தொடங்கிய நிலையில் அஜித் பவார் தனியாக பிரிந்து பாஜக கூட்டணியில் இணைந்தார். அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம், பெயர் அஜித்பவாரிடம் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த தேர்தலில் சரத்பவாரை அணியை விட அஜித் பவார் தரப்பு வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+