முதல்ல அயோத்தியில் கோவில்... அப்புறம் மகாராஷ்டிராவில் புதிய அரசு.. சிவசேனாவின் சஞ்சய் ராவத்
மும்பை: அயோத்தியில் முதலில் ராமர் கோவில் கட்ட வேண்டும். அதன்பிறகு மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைப்போம் என சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பாஜக கூட்டணியில் இருந்த போதும் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை சிவசேனா வலியுறுத்தி வருகிறது. லோக்சபா தேர்தலின் போது தமது கட்சி எம்.பி.க்களுடன் அயோத்திக்கு செல்வோம் என அறிவித்திருந்தார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

இதனையடுத்து ஜூன் மாதம் அயோத்திக்கு சென்றார் உத்தவ் தாக்கரே. அப்போது பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு மத்திய அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என பிரதமர் மோடியை வலியுறுத்தியிருந்தார்.
தற்போது அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தில் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்திருக்கிறது. இத்தீர்ப்பை வரவேற்றுள்ள உத்தவ் தாக்கரே, இதற்கு மத்திய அரசு உரிமை கோர முடியாது என்றார்.
இதனிடையே சிவசேனாவின் மூத்த தலைவரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் தமது ட்விட்டர் பக்கத்தில், முதலில் கோவில்.. பிறகு அரசு.. அயோத்தியில் கோவில்... மகாராஷ்டிராவில் புதிய அரசு.. ஜெய் ஶ்ரீராம் என பதிவிட்டுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications