மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வீடியோ: ப்ளிப்கார்டில் 'ஐபோன் 12' ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த ஷாக்.. நீங்களே பாருங்கள்

Google Oneindia Tamil News

மும்பை : ஃப்ளிப்கார்ட்டின் பண்டிகை கால ஆஃபரில் ரூ.53000க்கு 'ஐபோன் 12' ஆர்டர் செய்த மும்பையை சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்ற நபருக்கு 2 நிர்மலா சோப்பு கட்டிகள் டெலிவரி செய்யப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தார்.

நீண்ட முயற்சிக்கு பின்னர் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டு புகார் அளித்த நிலையில், முழு பணம் தனக்கு திரும்ப கிடைத்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இ-காமர்ஸ் இணையதளமான ஃப்ளிப்கார்ட்டில் பிக் பில்லியன் டே விற்பனையின் போது ஐபோனை ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கு வாழ்நாளில் பார்த்திராத அதிர்ச்சி காத்திருந்தது. அவர் ஒரு புதிய போனை எதிர்பார்த்தபோது, அவரது வீட்டுக்கு வந்தது ஒரு ஜோடி சோப்பு கட்டிகள்.

ஆரம்பமே சறுக்கிய அதிமுக, பாமக.. சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?.. பின்னணி! ஆரம்பமே சறுக்கிய அதிமுக, பாமக.. சட்டசபை வெற்றியை உள்ளாட்சியிலும் தொடர்கிறதா திமுக?.. பின்னணி!

ஐபோன் ஆர்டர்

ஐபோன் ஆர்டர்

ஃபிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையை கடந்த சில நாட்களாக நடத்தியது. அப்போது பெரும் தள்ளுபடியில் பொருட்களை விற்றது. ஆப்பிள் போனை ஆபரில் வாங்க மும்பையை சேர்ந்த சிம்ரன்பால் சிங் என்பவர் விரும்பினார் .ரூ.53000க்கு ஆப்பிள் ஐபோன் 12 ஐ அவர் ஆர்டர் செய்திருக்கிறார். டெலிவரி மேன் இவரிடம் பாக்ஸை கொடுத்துள்ளார். வீடியோ எடுத்தபடி ஆசையோடு பிரித்த பார்த்த மும்பைவாசிக்கு இரண்டு நிர்மலா சோப்பு கட்டி தான் இருந்துள்ளது .

ப்ளிப்கார்ட்

ப்ளிப்கார்ட்

பிளிப்கார்ட் மிகவும் நம்பகமான ஆன்லைன் ஷாப்பிங் போர்ட்டல்களில் ஒன்று என்பதால் இந்த சம்பவம், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை சிம்ரன்பால் சிங் உணர்ந்தார். இதையடுத்து டெலிவரி செய்யும் நபரிடம் ஆர்டரை பெற்றுக்கொண்டேன் என்பதற்காக அனுப்பப்படும் OTP யைப் பகிர்ந்து கொள்ள அவர் மறுத்துவிட்டார்.

திரும்ப பணம்

திரும்ப பணம்

அதன்பின்னர் அதை வீடியோவாக யூடியூப்பில் பதிவேற்றம் செய்தார். அத்துடன் பிளிப்கார்ட்டின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு புகார் செய்தார். அதன்பின்னர் சிம்ரன்பால் சிங்கிற்கு ஆப்பிள் போனுக்கு பதில் சோப்பு கட்டியை விநியோகம் செய்த நிறுவனத்துடன் ப்ளிப்கார்ட் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. இறுதியாக நீண்ட முயற்சிகு பிறகு ப்ளிப்கார்ட் தவறை ஒப்புக் கொண்டு அவருடைய ஆர்டரை கேன்சல் செய்து அவரது முழு பணத்தை திரும்ப அளித்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைனில் பொருள்கள் வாங்கும் மக்கள் உங்களிடம் டெலிவரி செய்யும் போது, அவர் முன்பே பிரித்துபார்த்து நீங்கள் ஆர்டர் செய்த பொருள் தான் கிடைத்துள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் சிக்கலை சந்திக்கும் நிலை வரலாம். குறிப்பாக விலை உயர்ந்த பொருட்களை ஆர்டர் செய்யும் போது கண்டிப்பாக ஒடிபியை பகிரும் முன்பு ஆர்டர் செய்த பொருள் தான் அனுப்பி இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து ஒடிபியை பகிருங்கள். ஆர்டரை எளிதாக கேன்சல் செய்ய முடியும் என்றாலும், பொருள் மாறி இருந்தால் ஏற்க மாட்டார்கள் என்பது விழிப்புடன் இருப்பது அவசியம் ஆகும்.

English summary
several cheating cases against e-commerce websites have been registered due to the delivery of wrong items or faulty items. This time a mumbai man went through such an ordeal of getting a soap bar instead of the iPhone 12 bought during the Flipkart Big Billion Day Sale.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X