ஜேஆர்டி டாடா முதல் ரத்தன் டாடா வரை.. ராஜாஜி முதல் நீரா ராடியா வரை.. அரசியல் கண்ணிவெடிகளின் கதை இது!
மும்பை: டாடா குழுமத்தின் தலைவர்களாக இருந்த ஜேஆர்டி டாடா, நவல் டாடா தொடங்கி தற்போது மறைந்த ரத்தன் டாடா வரை அரசியல் அரங்கில் பேசு பொருளாகவும் விவாதத்துக்குரியவர்களாகவும் உருமாறி இருப்பது ஒரு தொடர் வரலாறாகவே இருந்திருக்கிறது. ஜேஆர்டி டாடாவுக்கும் நேருவுக்கும் மோதல்; நவல் டாடாவுக்கும் இந்திராவுக்கும் மோதல்; காங்கிரஸ் ஆட்சிக்கு வேட்டு வைத்த நீரா ராடியே டேப் விவகாரங்களில் ரத்தன் டாடா என இந்திய அரசியலில் தொடர்ந்து டாடா குழுமம் சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டுதான் இருந்திருக்கிறது.
இந்திய தொழில்துறையின் முகமாக இருப்பது டாடா குழுமம். டாடா குடும்பத்தைச் சேர்ந்த பலரும் இந்த நிறுவனத்தின் தலைவர்களாக இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

நேரு vs ஜேஆர்டி டாடா: தற்போது மறைந்த ரத்தன் டாடாவின் தாத்தா சர் ரத்தன் டாடா, தேசவிடுதலைப் போரில் பங்கேற்றவர். அவரது மகன்களில் ஒருவர்தான் ஜேஆர்டி டாடா. இந்தியாவின் முதல் விமானி என்ற பெருமைக்குரியவர். நாடு விடுதலை அடைந்த காலத்தில் டாடா குழுமத்தின் தலைவராக இருந்து வழிநடத்தியவர். நேரு பிரதமராக இருந்த காலத்தில் காங்கிரஸில் இருந்து வெளியேறிய ராஜாஜி சுதந்திரா கட்சியைத் தொடங்கினார். அப்போது ராஜாஜியை ஜேஆர்டி டாடா ஆதரிக்க நேரு கடும் கோபம் கொண்டார். இதனால் நேருவுடன் ஜேஆர்டி டாடாவுக்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் சில காலம் தொடர்ந்தது.
இந்திரா vs நவல் டாடா: 1971-ம் ஆண்டு இந்திரா காந்தி காலத்தில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பெரும் பரபரப்பு சமபம் நிகழ்ந்தது. தற்போது மறைந்த ரத்தன் டாடாவின் தந்தை நவல் டாடா, தெற்கு மும்பை லோக்சபா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட விரும்பினார். இந்திரா காந்தி அம்மையார் இதனை விரும்பவில்லை. நவல் டாடா மீது கோபப்பட்ட இந்திரா அம்மையார், கைலாஷ் நரைன் வேட்பாளராக அறிவித்தார். இத்துடன் முடியவில்லை. இவர்கள் 2 பேருக்கு எதிராக களமிறங்கியவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். 1970-களில் இந்தியாவை அதிரவைத்த தொழிற்சங்கப் போராட்டங்களில் தலைவராக புரட்சியாளராக கொண்டாடப்பட்டவர்தான் ஜார்ஜ் பெர்னாண்டஸ். அப்போது டெல்லியில் உள்ள தமது இல்லத்துக்கு ஜார்ஜ் பெர்னான்டஸை வரவழைத்த நவல் டாடா, ஒட்டுமொத்த டாடா குழுமங்களின் தொழிற்சங்கங்களின் தலைவராக நீங்கள் இருந்து கொள்ளலாம்.. தெற்கு மும்பையில் போட்டியிட வேண்டாமே என பேரம் பேசினார். ஆனால் ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த பேரத்துக்கு இணங்கவில்லை. தேர்தலும் நடந்தது. நவல் டாடாவுக்கு 2-வது இடம்தான் கிடைத்தது.
ரத்தன் டாடா vs நீரா ராடியா: இதன் பின்னரும் டாடா குழுமங்கள் குறித்த அரசியல் சர்ச்சைகள் அவ்வப்போது வந்தாலும் 2010களில் வெடித்த நீரா ராடியா டேப் விவகாரம்தான் மிக முக்கியமானது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இடைத் தரகராக இருந்தவர்தான் நீரா ராடியா. இவருடன் திமுக தலைவர்களான கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் பேசிய தொலைபேசி பதிவுகள் வெளியாகி மிகப் பெரும் அரசியல் பூகம்பத்தையே ஏற்படுத்தியது. அப்போதைய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் நீரா ராடியா டேப் விவகாரம் முக்கியமானதாக இருந்தது.
இந்த நீரா ராடியாவுடன் ரத்தன் டாடா தொலைபேசியில் பேசிய பதிவுகளும் வெளியாகி இருந்தன. இதுவே ரத்தன் டாடா- நீரா ராடியா டேப் விவகாரம். ஆனால் ரத்தன் டாடா இதனை எளிதாக விட்டுவிடவும் இல்லை. தாம் தனிப்பட்ட முறையில் நீரா ராடியாவுடன் பேசியதை பதிவு செய்தது யார்? பதிவு செய்ய சொன்னது யார்? என் தனி உரிமையை பாதிக்கச் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தின் படிகளேறினார் ரத்தன் டாடா. இந்த வழக்கின் நிலைமை அறிக்கையை தாக்கல் செய்ய 2022-ல் உச்சநீதிமன்றம், சிபிஐக்கு உத்தரவிட்டிருந்தது. இதன் பின்னர் இவ்வழக்கின் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. இப்படி இந்திய அரசியலில் ஒவ்வொரு கால கட்டத்திலும் டாடா குடும்பம் அரசியலில் நுழைந்தாலே கண்ணிவெடிகளாகத்தான் இருந்திருக்கிறது என்பது வரலாறு.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications