மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்: கவுரி லங்கேஷ் கொலையில் சம்பந்தப்பட்டவர்.. சுயேட்சையாக நின்று வெற்றி
மும்பை: மகாராஷ்டிராவில் மாநகராட்சிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று ரிசல்ட் வெளியாகி வருகிறது. ஜால்னா மாநகராட்சி தேர்தலில், பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஷிரிகாந்த் பங்கர்கர், சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றிருக்கிறார்.
ஜால்னா மாநகராட்சியில் 13ம் எண் வார்டில் பங்கர்கர் களமிறங்கியிருந்தார். ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, இந்த வார்டில் வேட்பாளரை நிறுத்தாததால், பலமுனைப் போட்டி நிலவியது. இதில் பங்கர்கர், பாஜக மற்றும் பிற வேட்பாளர்களை 2,621 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.

கொலையும் வழக்கும்
கௌரி லங்கேஷ் கொலை தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும்போதே பங்கர்கரின் வெற்றி வந்துள்ளது. வெற்றியைத் தொடர்ந்து அவர் பேசுகையில், "எனக்கு எதிராக இதுவரை எந்தத் தண்டனையும் இல்லை, சட்ட போராட்டம் தொடர்கிறது" என்று கூறியிருக்கிறார். ரிசல்ட் வெளியான நிலையில், பங்கர்கர் தனது ஆதரவாளர்களுடன் கொண்டாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ஷேராகியிருந்தது. இந்த வீடியோக்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தல் அரசியலில் பங்கேற்பது குறித்து விவாதத்தைத் தூண்டியுள்ளன.
கொலை வழக்கில் ஜாமீன்
பத்திரிகையாளரும் சமூக ஆர்வலருமான கௌரி லங்கேஷ், கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ம் தேதியன்று கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டிற்கு வெளியே சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தப் படுகொலை நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பையும், கருத்துச் சுதந்திரம், எதிர்ப்பு, அரசியல் சகிப்புத்தன்மையின்மை பற்றிய பரந்த விவாதத்தையும் கிளப்பியது. இந்த வழக்கில் பங்கர்கர் குற்றம்சாட்டப்பட்டவராக சேர்க்கப்பட்டார். கர்நாடக உயர் நீதிமன்றம் அவருக்கு கடந்த 2024ம் ஆண்டு செப்.4ம் தேதி ஜாமீன் வழங்கியது.
பயங்கரவாத எதிர்ப்புப் படையால் கைது
பங்கர்கர் 2001 முதல் 2006 வரை பிரிக்கப்படாத சிவசேனாவின் ஜால்னா நகராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 2011-ல் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதை அடுத்து, அவர் வலதுசாரி இந்து ஜனஜாக்ருதி சமிதியில் சேர்ந்தார். 2018ம் அண்டு ஆகஸ்ட் மாதம், மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் இருந்து வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதலுக்குப் பிறகு, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையால் பங்கர்கர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications