நிர்வாணமாக.. காட்டை விட்டு வெளியே வந்த "லவ்வர்".. அதிர்ந்த போலீஸார்.. மலைக்கோயிலில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் காதலனை நிர்வாணமாக கட்டிப்போட்டு காதலியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் மாவட்டத்தின் விரார் மலையில் 'ஜிவ்தானி' கோயில் ஒன்று இருக்கிறது. ஆதிசக்தியாக இங்கு அம்மன் காட்சியளிக்கிறார். மும்பையிலிருந்து வெறும் 60 கி.மீ தொலைவில்தான் இக்கோயில் அமைந்திருப்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும், காதல் ஜோடிகளும் வருவதுண்டு. அப்படிதான் இரண்டு தினங்களுக்கு முன்னர் இந்த பகுதியில் ஒரு காதல் ஜோடி வந்திருக்கிறது. மாலை நேரத்தில் இவர்கள் காதல் மொழி பேசியவாறு இருந்திருக்கின்றனர்.

அப்போது அங்கு தீரஜ் சோனி, லட்சுமண் ஷிண்டே என இரு இளைஞர்கள் மது அருந்த பீர் பாட்டலுடன் வந்திருக்கின்றனர். காதலர்கள் தனிமையில் காதல் மொழி பேசிக்கொண்டிருந்ததை பார்த்த இவர்கள் அதனை செல்போனில் வீடியோவாக எடுத்திருக்கின்றனர். பின்னர் அந்த வீடியோவை காதலனிடம் காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கின்றனர். காதலனும் வேறு வழியின்றி ரூ.500-ஐ கொடுத்திருக்கிறார். பணத்தை பெற்றுக்கொண்ட பின்னரும் அங்கிருந்து இவர் இருவரும் போகாமல் இளம்பெண்ணிடம் சில்மிஷம் செய்ய தொடங்கியுள்ளனர்.

தாக்குதல்

தாக்குதல்

இதற்கு எதிராக காதலன் தொடர்ந்து எச்சரித்துள்ளார். ஆனால் இதனை அவர்கள் கேட்கவில்லை. எனவே ஷிண்டே வைத்திருந்த பீர் பாட்டிலை பிடுங்கி தீரிஜின் தலையில் பலமாக காதலன் தாக்கியுள்ளார். இதனால் நிலை குலைந்துபோன தீரஜ் சற்று நேரம் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்கிறார். பின்னர் மீண்டும் சுதாரித்துக்கொண்டு காதலனை தாக்க தொடங்கியுள்ளனர். இருவரின் தாக்குதலை ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் போன காதலன் பலத்த காயங்களுடன் சரிந்துள்ளார். பின்னர் அவனுடைய ஆடைகளை கழற்றி நிர்வாணமாக்கி மரத்தில் கட்டிப்போட்டுள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

பாலியல் பலாத்காரம்

காதலியையும் காட்டின் வேறு பகுதிக்கு கொண்டு சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனையடுத்து மயக்கம் தெளிந்த காதலன் கட்டை அவிழ்த்துக்கொண்டு காதலியை தேடியுள்ளார். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே நிர்வாணமாகவே காட்டை விட்டு கீழே இறங்கி வந்து உதவிக்கு ஆட்களை கூப்பிட்டுள்ளார். ஆனால் காதலன் நிர்வாணமாக இருப்பதை கண்ட பொதுமக்கள் அவர் மனநலன் பாதிக்கப்பட்டவர் என்று கருதி உதவிக்கு போகவில்லை. பின்னர் அப்பகுதி மக்கள் சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நிர்வாண இளைஞரை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

காவல்துறை

காவல்துறை

பின்னர் அவரிடம் விசாரித்ததில் "தனது காதலியை சிலர் கடத்தி சென்றுவிட்டார்கள்" என்று கூறியுள்ளார். இதனையடுத்து காவலர்கள் காடு முழுவதும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் யாரையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் இளைஞர் மீது சந்தேகமடைந்த போலீசார் மேலும் விசாரணை நடத்தினர். அதில் காதலன் தீரஜின் தலையில் பீர் பாட்டீல் கொண்டு தாக்கியுள்ள சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் உள்ளூர் மருத்துவமனையில் விசாரித்துள்ளனர். விசாரணையில் ஒரேயொரு நபர் மட்டும் பீர் பாட்டிலால் தாக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருவதாக மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

கைது

கைது

அந்த நபரை போட்டோ எடுத்தும் அனுப்பியுள்ளனர். அந்த போட்டோவை காதலனிடம் காட்ட காதலனை அதனை உறுதி செய்துள்ளார். பின்னர் உடனடியாக தீரஜை கைது செய்தனர். பின்னர் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஷிண்டேவையும் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பாக காதலியின் வீட்டிற்கு சென்று போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். அதன் அடிப்படையில் தீரஜ், ஷிண்டே மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+