நல்ல பாக்டீரியாக்கள் முக்கியம்.. கொரோனா நோயாளிகளில் பாதிபேரை கொல்லும் 2ம் கட்ட பாதிப்பு.. ஐசிஎம்ஆர்

Subscribe to Oneindia Tamil

மும்பை: கொரோனா தொற்றில் இருந்து மீண்டு அதன் தாக்கத்தால் இறந்தவர்கள் அல்லது சிகிச்சை பெற்ற போதே இறந்தவர்களில் பாதி பேர் பாக்டீரியா அல்லது பூஞ்சைகளால் 2வது முறையாக தொற்று ஏற்பட்டு இறந்தது ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகப்படியான நோய் எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு மற்றும் வைரஸ், பாக்டீரியா, பூஞ்சை போன்ற கிருமிகள் இந்தியாவில் கொரோனா தொற்றுநோயின் தீவிரத்தை இன்னும் மோசமாக்கும் என்று மும்பையின் பிரபலமான 10 மருத்துவமனைகளில் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பின்னர் இரண்டாம் நிலை தொற்றால் பாதிக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பது தெரியவந்துள்ளது. இரண்டாம் நிலை நோய்த்தொற்று என்பது ஒரு நோய்த்தொற்றுக்காக சிகிச்சை பெறும் போது அல்லது அதற்குப் பிறகு ஏற்படும் புதிய பாதிப்பு ஆகும். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் அல்லது சிகிச்சை பெறும் நோயாளிகளில் பாதி பேர், பாக்டீரியா அல்லது பூஞ்சைகளால் தொற்று ஏற்பட்டு இறப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

பாக்டீரியா தொற்று

பாக்டீரியா தொற்று

ஐ.சி.எம்.ஆர் நடத்திய இந்த ஆய்வில் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. ஆய்வு செய்யப்பட்ட 17,000 கோவிட் நோயாளிகளில் 4% பேர் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டு இருந்தனர்.

சூப்பர் கிருமி பாதிப்பு

சூப்பர் கிருமி பாதிப்பு

ஆனால் ஐ.சி.எம்.ஆரின் மூத்த விஞ்ஞானி காமினி வாலியா இது பற்றி கூறும் போது, ஒட்டுமொத்த கோவிட் -19 மருத்துவமனைகளில் இந்த எண்ணிக்கையை பார்த்தால் லட்சக்கணக்கான மக்கள் நீண்டநாட்கள் மருத்துவமனையில் இரண்டாம் நிலை தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள் என்பது ஆய்வில் தெரிகிறது. பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு அதிகப்படியான நோய் எதிர்பபு மருந்துகள் அளிக்கப்படுகின்றன. அப்படி அளிக்கப்படும் மருந்துகள் காரணமாக 10 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு சூப்பர் கிருமிகளால் பாதிப்பும் உருவாகிறது" என்றார்.

ஐசிஎம்ஆர் ஆய்வு

ஐசிஎம்ஆர் ஆய்வு


உலகம் முழுவதும் கோவிட் -19 இறப்பு மொத்த பாதிப்பில் 10% ஆக உள்ளது. . ஐ.சி.எம்.ஆர் நடத்திய இந்த புதிய ஆய்வில் பார்த்தால் , கோவிட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் பாக்டீரியா அல்லது பூஞ்சை தொற்றுகளால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 56.7% ஆக உளளது. அதாவது உயிரிழந்தவர்களில் 56.7 சதவீதம் பேர் கொரோனவிற்கு பின்னர் இரண்டாவது கட்ட பாதிப்பை சந்தித்த காரணத்தால்இறந்துள்ளனர்.

நோயாளிகளின் நிலை

நோயாளிகளின் நிலை

ஐசிஎம்ஆர் ஆய்வில் கிடைத்த இன்னொரு முக்கியமான தகவலை இப்போது பார்ப்போம். வழக்கமான நோய் எதிர்ப்பு மருந்துகளுடன், சிகிச்சையளிக்க முடியாத அளவிற்கு சூப்பர் கிருமிகளின் பாதிப்புகள் இருப்பதால் பல நோயாளிகளுக்கு. அதிக சக்திவாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்து தேவை என்பது இந்த ஆய்வில் கிடைத்த முக்கியமான விஷயம் ஆகும். அதன்படி பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பாதிக்கும் மேற்பட்டவர்களுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டிருப்பதாக ஆய்வை நடத்திய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அழிக்கும் மருந்துகள்

அழிக்கும் மருந்துகள்

இதனிடையே நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதால் தான் கருப்பு பூஞ்சை அல்லது மியூகோமிகோசிஸ் போன்ற அரிய தொற்றுநோய்களின் பரவலுக்கு காரணம் என்று பல நிபுணர்கள் (ஆய்வுடன் இணைக்கப்படவில்லை) நம்புகின்றனர். டாக்டர் ராகுல் பண்டிட் இதுபற்றி கூறுகையில் " நமது உடலில் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, இவை உடலுக்கு நல்ல விஷயங்களையே செய்கின்றன. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகம் வைத்திருக்க உதவுகின்றன. ஆனால் ஒரு காரணமின்றி நுண்ணுயிர்களை அழிக்கும் நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்படும்போது, ​​இவை நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்த அழித்து விடுகின்றன. இதனால் திடீரென சந்தர்ப்பம் கிடைக்கும் போது பாக்டீரியா அல்லது வைரஸ் அல்லது பூஞ்சைகளால் நோய்த்தொற்று ஏற்படுகிறது. அவை நம்மை பாதித்து விடுகிறது"என்று கூறினார்.

நோய்த்தொற்றுகள்

நோய்த்தொற்றுகள்

இந்துஜா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் குஸ்ரவ் பஜன் இதுபற்றி கூறுகையில், "முதல் கொரோனா அலையின் போது நடத்தப்பட்ட ஆய்வுகள், 17% கோவிட் நோயாளிகளுக்கு இரண்டாம் நிலை நோய்த்தொற்றுகள் இருப்பதாகவும், 73% பேருக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. ஆனால் இரண்டாவது அலைகளில், வீட்டிலேயே முதல் கட்ட சிகிச்சையின் போது இரண்டு அல்லது மூன்று நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் எடுத்துக் கொண்டு எங்களிடம் இளைஞர்கள் வருகிறார்கள். அப்படி வருவதால் அவர்களுக்கு அதிக நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவை ஏற்படுகிறது" என்றார்.

Recommended Video

    Corona-வின் தொடக்கம் இதுவா? 9 வருடங்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம்.. வலுக்கும் சந்தேகம்
    தவறான பயன்பாடு

    தவறான பயன்பாடு

    டாக்டர் வாலியா ஐசிஎம்ஆர் ஆய்வு பற்றி கூறுகையில். " ஒரு நோயாளி நீண்ட காலமாக மருத்துவமனையில் தங்கியிருப்பதால், அவர்களுக்கு ஐ.சி.யூ அல்லது வென்டிலேட்டர் தேவைப்படும் வாய்ப்பு அதிகம். அத்தகைய கோவிட் நோயாளிக்கு நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் தேவைப்படுகின்றன, ஆனால் கவலைக்குரியது அதிகப்படியான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்தகள் தேவைப்படுவதுதான். இந்த மருந்துகள் கெட்ட பாக்டீரியா வைரஸ்களை அழிப்பது நல்ல பாக்டீரியாவையும் சேர்த்து அழித்து விடுகிறது. இதுவே கொரோனாவல் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டாம் முறையாக பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளால் பாதிக்கப்பட காரணமாகிறது. முதல் அலையின் போது, ​​10% நோயாளிகளுக்கு பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டிருந்து. ஆனாலும் அது தேவையில்லை என்று ஐசிஎம்ஆர் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இப்போது மியூகோமிகோசிஸின் பயத்துடன், அதிகப்படியான பூஞ்சை எதிர்ப்பு மருந்து தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன" இவ்வாறு டாக்டர் வாலியா கூறினார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+