யார் உங்கள ட்வீட் பண்ண சொன்னது...சச்சின், லதா மங்கேஷ்கருக்கு ராஜ் தாக்ரே கேள்வி
மும்பை : வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கரை மத்திய அரசு ட்வீட் பண்ணும்படி கேட்கவில்லையே என நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் ராஜ் தாக்ரே தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனை எதிர்த்து இந்திய பிரபலங்கள் பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

பிப்ரவரி 3 ம் தேதியன்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் பதிவிட்ட ட்வீட்டில், இந்தியாவின் இறையாண்மையில் சமரசம் செய்ய முடியாது. வெளிநாட்டு சக்திகள் வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும், இதில் பங்கேற்க முடியாது. இந்தியாவை பற்றி இந்தியர்கள் அறிவார்கள். அவர்கள் இந்தியாவிற்காக முடிவு செய்யாதவர்கள். நாட்டிற்காக ஒன்றுபட்டு நிற்பார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

அதே நாளில் ட்விட்டரில் கருத்து பதிவிட்ட லதா மங்கேஷ்கர், இந்தியா புகழ்பெற்ற நாடு. நாங்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதில் பெருமை கொள்கிறோம். எந்த பிரச்னை வந்தாலும், நாடு ஒருமையுடன் எதிர்கொள்வோம். மக்களின் நலன்களை கருத்தில் கொண்டு அதற்கான தீர்வை காண்போம் என குறிப்பிட்டிருந்தார்.

சச்சின் டெண்டுல்கர் மற்றும் லதா மங்கேஷ்கரின் கருத்து பற்றி பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட ராஜ் தாக்ரே, சச்சின் டெண்டுல்கர், லதா மங்கேஷ்கர் போன்ற பெரிய பிரபலங்களை தங்களின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக கருத்து பதிவிடும்படி மத்திய அரசு கேட்கவேயில்லை. அவர்கள் பாரத ரத்னா விருது பெற்றவர்கள். அக்ஷய் குமார் போன்றவர்களே இது போன்ற பணிக்கே போதுமானவர்கள் என்றார்.
விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டு பிரபலங்கள் பேசி வருவதை போன்று, மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அஜய் தேவ்கன், அக்ஷய் குமார், டெண்டுல்கள், லதா மங்கேஷ்கர் போன்றோரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டும் வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications