Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகாராஷ்டிராவை மிரட்டும் ஜிபிஎஸ் நரம்பியல் நோய்.. அறிகுறிகள் என்ன? பரவக் கூடியதா?

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜிபிஎஸ் எனப்படும் "கிலான் பாரே சின்ட்ரோம்" நோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. சோலாப்பூரில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் 111 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதில் இருவர் கவலைக்கிடமான சூழலில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஜிபிஎஸ் நோய் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன என்பவை குறித்து இங்கே பார்க்கலாம்.

ஜி.பி.எஸ்., எனப்படும் 'கிலன் பா சிண்ட்ரோம்' ஒரு அரியவகை நரம்பியல் கோளாறு ஆகும். இதன் பாதிப்பு மகாராஷ்டிராவில் தற்போது அதிகரித்துள்ளது. இந்த நோய் பாதிப்பினால் புனேவில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் இருவர் செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். இதுவரை மாநிலத்தில் 111 பேருக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

maharashtra health

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு மீண்டவர்கள் உள்ளிட்டவர்களுக்கு இந்த நோய் பாதிப்பு ஏற்படுகிறது. அசுத்தமான தண்ணீரால் ஜிபிஎஸ் பாதிப்பு பொதுமக்களுக்கு ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசின் டாக்டர்கள் குழுவினர் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 7 பேர் இடம் பெற்ற இந்தக் குழுவினர் புனேயில் நோய் பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜிபிஎஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கமலா நேரு மருத்துவமனையில் 45 படுக்கை வசதிகளுடன் பிரத்யேக வார்டு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

ஜிபிஎஸ் நோய் என்றால் என்ன?

லன் பா சிண்ட்ரோம் ஒரு அரியவகை நரம்பியல் பாதிப்பினால் தசைகளில் திடீர் உணர்வின்மை மற்றும் பலவீனம் இரண்டையும் ஏற்படுத்துகிறது. கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கும்.

இதன் காரனமாக கால்கள் அல்லது கைகளில் உணர்திறன் இழக்கச் செய்கிறது. பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகள் இந்த ஜிபிஎஸ் பரவலுக்கு பொதுவான காரணமாக உள்ளது. நோய் எதிர்ப்பு மண்டலத்தை இது பலவீனமாக்கும். இந்த நோய்க்கான காரணம் தெளிவாக குறிப்பிடப்படவில்லை

மாசடைந்த குடிநீர், சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியா தொற்று உள்ளிட்டவற்றால் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, கை, கால்களில் திடீர் பலவீனம் உள்ளிட்டவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். வயதானவர்கள், இளம் வயதினர் என அனைத்து தரப்பினரையும் ஜிபிஎஸ் நோய் தாக்கும். இது ஒரு பெருந்தொற்றாக மாறாது. பெரும்பாலான நோயாளிகள் சிகிச்சை மூலமாக முழுவதும் குணம் அடைந்து விடுவார்கள்.

குடிநீரை காய்ச்சி குடித்தல், காய்கறிகள் மற்றும் பழங்களை நன்கு கழுவிய பிறகு சாப்பிடுதல், இறைச்சி உணவுகளை முறையாக சமைத்து சாப்பிடுதல், பச்சையாக அல்லது அரைகுறையாக சமைத்து சாப்பிடுவதை தவிர்ப்பது. குறிப்பாக முட்டை, மீன் உணவுகள் ஆகியவற்றை நன்கு சமைத்து சாப்பிட வேண்டும் என்று மகாராஷ்டிரா சுகாதாரத்துறை நோய் தடுப்பு முறைகளாக அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+