10ம் வகுப்பு முடித்தாலே போதும்.. கைநிறைய சம்பளம்.. தெற்கு கமாண்ட் தலைமையகத்தில் சூப்பர் வேலை!
மும்பை: மத்திய பாதுகாப்பு துறையின் தெற்கு கமாண்ட் தலைமையகத்தில் காலியாக உள்ளி சிஎஸ்பிஓ பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு கைநிறைய சம்பளம் மற்றும் அலோவன்ஸ் வழங்கப்பட உள்ளது.
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டால் சதர்ன் கமாண்ட் தலைமையகம் (Head Quaters Southern Command) மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் செயல்பட்டு வருகிறது. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் விபரம் வருமாறு:

அதன்படி சதர்ன் கமாண்ட் தலைமையகத்தில் காலியாக சிஎஸ்பிஓ எனும் சிவிலியன் ஸ்வீச் போர்ட் ஆபரேட்டர் (Civilian Switch Board Operator or CSBO) பணிக்கு 53 காலியிடங்கள் உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பம் செய்ய விரும்புவோர் 18 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். மேலும் அரசு எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 வயது வரையும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டு வரையும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வயது வரையும் தளர்வு அளிக்கப்பட உள்ளது. வயது வரம்பு என்பது 2023 ஏப்ரல் 7 ம் தேதியின் அடிப்படையில் கணக்கீடு செய்யப்படும்.
விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பு முடித்திருக்க வேண்டும். அதோடு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் பேச தெரிந்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.21,700 சம்பளமாக வழங்கப்படும். மேலும் லெவல் 3, செல் 1 அடிப்படையில் அலோவன்ஸ் வழங்கப்பட இருக்கறது.
விண்ணப்பம் செய்வோர் எழுத்து தேர்வு மற்றும் திறனறி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் சென்று விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து மே மாதம் 5ம் தேதிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன், ‛The officer-In-Charge, Southern Command signal Regiment, Pune(Maharashtra), PIN 411001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணபங்களை தபால், ஸ்பீட் போஸ்ட், ரிஜிஸ்டர் போஸ்ட் வகைகளில் அனுப்ப வேண்டும். இவ்வாறு விண்ணப்பம் அனுப்பும்போது அதன்மீது Appllication for the post of CSBO Grade-II என குறிப்பிட வேண்டும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண Click Here
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி












Click it and Unblock the Notifications