திடீர்னு மும்பை ஏர்போர்ட்டில் குவிந்த கூட்டம்.. விமானங்களை தவறவிட்ட பயணிகள்.. என்னாச்சு..?

மும்பை விமான நிலையத்தில் மக்கள் நெரிசல் அதிகமாக காணப்படுகிறது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை ஏர்போர்ட்டில், இன்று காலை முதலே கட்டுக்கடங்காத கூட்டம் கூடி வருகிறது.. இதனால் பல பயணிகள் தங்கள் விமானங்களை தவறவிட்டு, அலைக்கழிப்புக்கு ஆளாகி உள்ளனர்... இந்த கூட்ட நெரிசல் வீடியோவாகவும் வெளிவந்து பரவி கொண்டிருக்கிறது.

பண்டிகை காலம் துவங்கிவிட்டது.. இது நவராத்திரி விழா காலம் என்பதால் வடமாநிலங்களில் எங்கு பார்த்தாலும் கூட்டம் தென்படுகிறது.. குறிப்பாக, விமான நிலையத்திலும் வழக்கத்தைவிட அதிக அளவு பயணிகள் குவிந்து கொண்டிருக்கிறார்கள்.

இன்றும் அப்படித்தான் மும்பை விமான நிலையத்தில் கூட்டம் காணப்பட்டது.. முதலே ஏராளமான விமானப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஒவ்வொரு மையத்திலும் நீண்ட வரிசையில் பயணிகள் காத்திருக்கிறார்கள்..

தாமதம்

தாமதம்

பெரும்பாலான பயணிகள் முன்கூட்டியே வராமல் கடைசி நேரத்தில் வந்துவிட்டனர். அதனால் பாதுகாப்பு சோதனைகளுக்காக வரிசையில் நீண்ட காலம் காத்து நிற்க வேண்டியதாகிவிட்டது. இதன்காலமாகவே பலர் தங்களது விமானத்தை குறிப்பிட்ட அந்த நேரத்தில் தவறவிட்டனர்.. செக்கிங் காரணத்துக்காக அந்த விமானத்தை பிடிக்க முடியாமல் போனது.

பயணிகள்

பயணிகள்


ஆனால், இப்படி மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால்தான், விமான சேவை நிறுவனங்கள், செக்கிங் உள்ளிட்ட பணிகளை விரைவாக செய்து முடிக்க, பயணிகளை சில மணி நேரம் முன்கூட்டியே ஏர்போர்ட்டுக்குள் வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.. அப்படி முன்கூட்டியே சொல்லியும், கடைசியாக வரவும்தான், தாங்கள் செல்ல வேண்டிய ஃபிளைட்டுகளை தவறவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

செக்கிங்

செக்கிங்

மேலும், பயணிகளின் பாதுகாப்புக்கே எல்லாவற்றையும்விட முன்னுரிமை என்பதால், பாதுகாப்பு சோதனையில் எந்த சமரசமும் செய்து கொள்ள முடியாது என்று அதிகாரிகளும் கறாராக தெரிவித்துவிட்டனர்.. வழக்கமாக, பண்டிகை காலங்களில் ஏர்போர்ட்களில் கூட்டநெரிசல் அதிகமாக காணப்படும் என்றாலும், இந்த முறை சற்று அதிகம் என்கிறார்கள்..

வீடியோ

வீடியோ

மும்பையை தவிர, நாட்டின் பல நகரங்களில் உள்ள விமான நிலையங்களிலும் கூட்டம் அலைமோதுவதாகவே தகவல்கள் கூறுகின்றன... கொரோனா பரவல் கலக்கம் ஏதுமின்றி, கொரோனா விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் அலைமோதும் இந்த மக்கள் கூட்டமானது, வீடியோவாகவும் சோஷியல் மீடியாவில் பரவிக் கொண்டிருக்கிறது. வரும் காலங்களில் பண்டிகைகள் தொடர்ச்சியாக உள்ளதால், கொரோனா விதிகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று நேற்றைய தினம் மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+