"காட்டன் பெல்ட்".. மகாராஷ்டிராவில் பாஜகவை வீழ்த்த முக்கிய காரணம் ஆன "திமுக".. இதெல்லாம் வேற லெவல்
மும்பை: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்கு பின் திமுகவின் அரசியலும் மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. மாநிலத்தில் மூன்று கட்டங்களாக நடந்த வாக்குப்பதிவில் 61.33 சதவீத வாக்குகள் பதிவாகின.

அங்கே 3 விதமான கூட்டணிகள் நிலவுகின்றன. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உடைந்த காரணத்தால் தேர்தல் கூட்டணிகள் மூன்றாக பிரிந்தன.
பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா, அஜித் பவர் தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஜா ஆகியவை ஒன்றாக கூட்டணி வைத்தன. இதற்கு மஹாயுத்தி என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்துள்ளன. இதற்கு மகா ஆகாடி என்று வைக்கப்பட்டு உள்ளன. இது போக சிபிஐ, சிபிஎம், பகுஜன் சமாஜ் போன்ற கட்சிகள் தனியாக கூட்டணி அமைத்துள்ளன.
மகாராஷ்டிரா தேர்தல் சுவாரசியம்: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இரண்டையும் பாஜக உடைத்தது. இதனால் இரண்டு அணிகள் உருவாகின. சின்னங்கள் மாறின. இந்த நிலையில் லோக்சபா தேர்தலில் எந்த அணிகளுக்கு வாய்ப்பு கிடைக்கும். யாருக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும்.. எந்த அணியை உண்மையான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆக மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கேள்வி எழுந்தது.
அசத்தல் வெற்றி: மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது. காங்கிரசின் இந்திய கூட்டணி 30 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 13 இடங்களில் வென்றுள்ளது. சரத் பவார் என்சிபி 8 இடங்கள், உத்தவ் தாக்கரே 9 இடங்களில் வென்றது.
பாஜக கூட்டணி வெறும் 17 இடங்களில் வென்றது. பாஜக 9 இடங்களிலும், ஷிண்டேவின் சிவசேனா 7 இடங்களிலும் வென்றது.
அசத்தல்: இதில் மகாராஷ்டிராவில் காட்டன் பெல்ட் என்று அழைக்கப்படும், மராத்வாடா மற்றும் விதர்பாவில் எதிர்க்கட்சி (மஹா விகாஸ் அகாடி) எம்.வி.ஏ பெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது,. இந்த இரண்டு பிராந்தியங்களிலும் பாஜகவின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தலித், முஸ்லீம் மற்றும் குன்பி (திமுக) வாக்குகளை ஒருங்கிணைக்கும் எம்விஏவின் திறன், விதர்பா பிராந்தியத்தில் ஆளும் பிஜேபிக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தெரிகிறது, அங்கு அது ஏழு இடங்களை வென்றது.
பருத்தி பெல்ட்: 2014 மற்றும் 2019 தேர்தல்களில் இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய பாஜகவுக்கு பத்து தொகுதிகள் கொண்ட பருத்தி பெல்ட் முக்கியமானது. கடந்த காலங்களில் அதிக விவசாயிகள் தற்கொலைகள் நடந்த இந்த பகுதியில் இருந்து பெரும் லாபம் ஈட்ட வேண்டும் என்று பாஜக எதிர்பார்த்தது. ஆனால் 2024 லோக்சபா தேர்தலில் இங்கே பாஜக தோற்றது.
திமுக ஸ்டைல் : மக்களவைத் தேர்தலில் இந்த பருத்தி பெல்ட்டில் தலித், முஸ்லீம் மற்றும் குன்பி வாக்குகளை ஒருங்கிணைக்க திமுக அங்கே முக்கிய காரணமாக இருந்துள்ளதாம். திமுக கூட்டணியில் இருந்ததால் தலித், முஸ்லீம் மற்றும் குன்பி வாக்காளர்களின் நம்பிக்கையுடன் இந்திய கூட்டணிக்கு வாக்களித்துள்ளனராம்.
திமுகவின் அரசியல் ஸ்டைல் விதர்பா பிராந்தியத்தில் ஆளும் பாஜகவிற்கு எதிராகச் செயல்பட்டதாகத் தெரிகிறது, அங்கு அது ஏழு இடங்களை இந்தியா கூட்டணி வென்றது.
அம்மாநில உள்ளூர் அரசியல் நிபுணர்கள் கூறுகையில், அங்கே காங்கிரஸ் கூட்டணிக்கு தலித், இடைநிலை சாதி வாக்குகள் கிடைத்த்து இல்லை. ஆனால் திமுகவின் இடஒதுக்கீடு அரசியல் இந்தியா கூட்டணி வழியாக மகாராஷ்டிராவிற்கும் வந்துவிட்டது. இதன் காரணமாக மகாராஷ்டிராவில் காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பதிவு செய்துள்ளது என்று கூறப்படுகிறது.
-
”ஆபரேசன் கமலாலயம்” அண்ணாமலையால் ஆட்டம் காணும் பாஜக! பேராசிரியருக்கு பெரிய லக்! அமித் ஷாவின் ப்ளான்? -
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா?












Click it and Unblock the Notifications