குக்கரில் வெந்த உடல் உறுப்புகள், திடீரென "அந்த" சத்தம்! மும்பையில் லிவ் இன் பெண் கொலை! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிரா தலைநகர் மும்பையில் 56 வயதான நபர் ஒருவர் லிவ் இன் பாட்னரை கொடூரமாகக் கொலை செய்திருந்தார். இதற்கிடையே இந்தச் சம்பவம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

டெல்லியில் கடந்தாண்டு ஷர்த்தா வாக்கர் என்ற இளம் பெண் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அனைவருக்கும் நினைவில் இருக்கும்.. அவரது லிவ் இன் பாட்னர் அப்தாப் என்பவர் அவரை கொலை செய்தார்.

How Mumbai Gruesome Murder Discovered by Neighbour

கழுத்தை நெறித்து கொலை செத்து மட்டுமின்றி, ஷரத்தா வாக்கர் உடலைப் பல 30+ துண்டுகளாகவும் வெட்டி அதை டெல்லியில் பல இடங்களில் வீசியிருந்தார். நாட்டையே அதிர வைத்து இந்தச் சம்பவத்தில் அப்தாப் செய்யப்பட்டு, இப்போது விசாரணை நடந்து வருகிறது.

மும்பை: இதனிடையே அதேபோல மற்றொரு கொடூர கொலை அரங்கேறியுள்ளது. மும்பையில் ஒரு நபர் தனது லைவ்-இன் பார்ட்னரை கொடூரமாகக் கொலை செய்து, உடலை அப்புறப்படுத்த அதைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மும்பை மீரா சாலையில் உள்ள வீட்டில் 56 வயதான மனோஜ் சானே என்பவர் தனது லிவ் இன் பாட்னரான சரஸ்வதி வைத்யாவைக் கொடூரமாகக் கொலை செய்துள்ளார். சரஸ்வதிக்கு வயது 36ஆகும்.

மனோஜ் சானேவும் இந்த பெண்ணும் கடந்த மூன்று ஆண்டுகளாக மீரா சாலையில் உள்ள இந்த ஆகாஷ்கங்கா கட்டிடத்தின் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். அவர்களின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம்பக்கத்தினர், இது குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சரஸ்வதியின் உடல் உறுப்புகளை அவன் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். மேலும், சில உறுப்புகளை கிட்சனில் குக்கரிலும் வைத்துச் சமைத்ததாக கூறப்படுகிறது.

துர்நாற்றம்: இந்த கொடூரம் குறித்து பக்கத்து வீட்டுக்காரரான சோமேஷ் ஸ்ரீவஸ்தவா மேலும் சில தகவல்களைத் தெரிவித்துள்ளார். அதாவது துர்நாற்றம் வீசத் தொடங்கியதால் என்னவென்று கேட்க முதலில் அங்கே சென்றுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "நான் அங்கே சென்று கதவைத் தட்டிய போது, முதல் யாரும் கதவைத் திறக்கவில்லை. அப்போது எனக்கு உள்ளே இருந்து ஸ்பிரே அடிக்கும் சத்தம் கேட்டது.. அதன் பிறகே மனோஜ் சானே வெளியே வந்தார்.

மனோஜ் சானே தனக்கு அவசரமாக வேலை இருப்பதாகவும் இதனால் வெளியே செல்வதாகவும் என்னிடம் கூறினார். இருப்பினும், எனக்கு சந்தேகம் இருந்ததால் நான் அப்பார்ட்மென்ட் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவித்தோம். அதைத் தொடர்ந்து அவர்கள் போலீசாருக்கு இது குறித்து தெரியப்படுத்தினர். போலீசார் சற்று நேரத்திலேயே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் அந்த குடியிருப்பில் வந்த போது, இரண்டு கட்டர்களை கண்டுபிடித்தனர்.

கட்டர்கள்: பெண்ணின் உடல் வைத்திருந்ததாகச் சமையலறையில் மூன்று பக்கெட்களை போலீசார் கண்டுபிடித்தனர். தடயவியல் பரிசோதனைக்காக வீட்டில் இருந்து இரண்டு கட்டர்கள் ஆகியவற்றையும் போலீசார் கண்டறிந்தனர்" என்று அவர் தெரிவித்தார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் சில உடல் பாகங்கள் காணவில்லை என்றும், நகரில் பல பகுதிகளில் அதை அவர் வீசியிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். வீடு முழுக்க கடுமையான துர்நாற்றம் வீசியதால், போலீசார் அங்கே தேடவே மிகவும் சிரமப்பட்டனர்.

ஒருவழியாகத் தேடுதல் வேட்டையை முடித்துச் சம்பந்தப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து மும்பை துணை போலீஸ் கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், "அங்குத் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடலைக் கண்டுபிடித்தோம். அவர்கள் லிவ் இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். இது குறித்து அடுத்தகட்ட விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளோம்" என்றார்.

மனோஜ் சானே- சரஸ்வதி ஒன்றாக இருந்த போதும் கூட அவர்கள் குடியிருப்பில் இருந்த மற்றவர்களிடம் முகம் கொடுத்துக் கூட பேசியதில்லை என்றும் எப்போதுமே தனியாகவே இருப்பார்கள் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் அங்கே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+