இந்தியன் வங்கியின் மைக்ரோ கிரெடிட் கார்டு வழங்கும் விழா… மும்பையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
மும்பை: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான (MSME) நிதி ஆதரவை வலுப்படுத்தும் நோக்கில், இந்தியன் வங்கி தனது "மைக்ரோ கிரெடிட் கார்டு" திட்டத்தை மும்பையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் அறிமுகப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு மைக்ரோ கிரெடிட் கார்டுகளை வழங்கினார்.
இந்தியன் வங்கியின் நிர்வாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான பினோத் குமார், இந்த திட்டம் சிறு தொழில்களின் பொருளாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் என்று தெரிவித்தார். குறிப்பாக, சிறு தொழில் முனைவோர், கிராமப்புற தொழில்கள் மற்றும் தன்னிறைவு தொழில்களை மேற்கொள்ளும் மக்களுக்கு எளிதில் கடன் வசதி கிடைக்க இந்தத் திட்டம் உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மைக்ரோ கிரெடிட் கார்டு திட்டம் ரூபே தளத்தில் செயல்படவுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கு விரைவான மற்றும் சுலபமாக கடன் பெறும் வகையில் உருவாக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் நோக்கம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். சமீப காலமாக எம்எஸ்எம்இ துறைக்கான கடன் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.













Click it and Unblock the Notifications