பணக்காரர்கள் வீட்டில் கூடவா இப்படி நடக்கும்.. இஷா அம்பானி கேட்டவுடன் கொடுத்த நீடா அம்பானி!
மும்பை: ஏழை எளிய நடுத்தர மக்களாகிய நம் வீட்டில்தான் இருப்பது நடக்கிறது என்றால் இந்தியாவில் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி வீட்டிலும் இப்படித்தான் போல!
உலக பணக்காரர்களில் ஒருவரும் இந்திய பணக்காரர்களில் முன்னணி இடத்தில் இருப்பவருமான முகேஷ் அம்பானி வீட்டில் நடைபெறும் விசேஷங்களில் நடக்கும் சிறிய விஷயங்களை கூட மக்கள் ஆர்வத்துடன் பார்ப்பது வழக்கம்.
அந்த வகையில் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அணிந்திருந்த ஆடை என்ன, அதன் விலை என்ன, அவர் அணிந்திருந்த நகைகளின் சிறப்புகள் என்ன, அவர் வைத்திருக்கும் போனின் விலை என்ன? போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் எப்போதுமே இருக்கும்.

அம்பானியின் அன்டீலியா வீட்டின் சிறப்புகள், அந்த வீட்டின் பாதுகாப்பு அம்சங்கள், எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள், நீடா அம்பானி குடிக்கும் டீத்தூளின் விலை என்ன போன்றவற்றை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவோம். அது போல் அவர்களுடைய வாழ்க்கை முறையை தெரிந்து கொள்வதிலும் ஒரு அவா இருக்கும்.
அந்த வகையில் தற்போது இஷா அம்பானியின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இஷா அம்பானிக்கு 2022 ஆம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்தன. தற்போது இஷா அணிந்திருந்த நெக்லஸ்தான் பேசும்பொருளாக மாறியுள்ளது. சமூகவலைதளங்களில் பரவிய நீடா அம்பானி, இஷா அம்பானியின் படங்களில் இஷா அம்பானி அணிந்திருக்கும் நெக்லஸ் நீடா அம்பானியுடையதுதான் அதற்கு காரணம்.

அந்த புகைப்படத்தில் பிரபல வடிவமைப்பாளர் சப்யாசாச்சி முகர்ஜி வடிவமைத்த உடையில் இஷா அம்பானி தோற்றமளித்துள்ளார். அதில் இஷா அணிந்திருக்கும் வைர நெக்லஸும் மரகத கற்கள் பதித்த மோதிரமும் நீடா அம்பானியினுடையதாம். இஷா அம்பானியின் திருமணத்தில் இதை நீடா அணிந்திருந்தார். அது போல் கடந்த 2018 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தியின் போது நீடா அம்பானி அதே நெக்லஸை அணிந்திருந்தார்.
தாயின் நெக்லஸை இஷா அம்பானி அவருடைய உறவினரின் திருமணத்தில் அணிந்திருந்தார். எனவே ஏழையோ பணக்காரர்களோ யாராக இருந்தாலும் தாய், சகோதரி ஆகியோரின் உடமைகளை அணிந்து கொள்வதில் ஒரு ஆர்வம் இருக்கும் போல!
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications