மகாராஷ்டிரா; துணை முதல்வர் அஜித்பவாரின் ரூ1,000 கோடி சொத்துகளை பறிமுதல் செய்தது வருமான வரித்துறை!
மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் அமலாக்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பரபரப்பு ஓயவில்லை. அதற்குள் மாநில துணை முதல்வரும் நிதி அமைச்சருமான அஜித் பவாரின் ரூ1,000 கோடி சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்துள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜகவை கழற்றிவிட்டு சிவசேனா, காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைத்தது. முதலில் பாஜக-தேசியவாத காங். கூட்டணி ஆட்சி அமைய இருந்தது.
இதற்கான முயற்சிகளை முன்னெடுத்து துணை முதல்வராகவும் பதவி ஏற்றவர் அஜித் பவார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதனை ஏற்கவில்லை. இதனால் பாஜகவின் ஆட்சி அமைக்கும் கனவு தகர்ந்தது. பின்னர் அஜித் பவாரும் சரத்பவாருடன் இணைந்து கொண்டார்.

துணை முதல்வர்
சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங். கூட்டணி அரசில் துணை முதல்வராக்கப்பட்டார் அஜித் பவார். அவருக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே பல்வேறு ஊழல் முறைகேடு புகார்களில் சிக்கியிருந்தார் அஜித்பவார். இந்த நிலையில் கடந்த மாதம் அஜித் பவாருக்கு சொந்தமான பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

முதலில் அமலாக்கப் பிரிவு
அஜித் பவாருக்கு சொந்தமான சத்தாரா கூட்டுறவு சர்க்கரை ஆலை மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்தது என்ற புகார் முதலில் எழுந்தது. இதையடுத்து சர்க்கரை ஆலை உள்ளிட்ட இடங்களை முதலில் அமலாக்கத்துறை முடக்கியது. இதையடுத்து சர்க்கரை ஆலை மற்றும் அஜித் பவாரின் பினாமி நிறுவனங்கள் வருமான வரி ஏய்ப்பில் ஈடுபடுகின்றன என்ற குற்றச்சாட்டின் கீழ் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

ஐடி ரெய்டில் சிக்கியது
இந்த சோதனைகளின் போது சட்டவிரோதமான ரூ1,000 கோடி சொத்துகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் இன்று அஜித்பவாருக்கு சொந்தமான ரூ1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது.

ரூ1,000 கோடி சொத்துகள் பறிமுதல்
சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் 12 மணிநேர விசாரணைக்குப் பின்னர் இன்று அதிகாலையில் தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் உள்துறை அமைச்சருமான அனில் தேஷ்முக், அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதனால் மகாராஷ்டிரா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பு ஓய்வதற்குள் தற்போது துணை முதல்வரான நிதி அமைச்சர் அஜித்பவாரின் ரூ1,000 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா












Click it and Unblock the Notifications