Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாஜகவுக்கு குட்பை சொன்ன ஷிண்டேவின் சிவசேனா.. மீண்டும் ராஜ் தாக்கரே- உத்தவ் அணியுடன் கைகோர்ப்பு

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இடையே அதிகார போட்டி எழுந்துள்ளது. பாஜகவிடம் இருந்து மேயர் பதவியை பறிப்பதற்காக ஏக்நாத் ஷிண்டே ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் எனும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சியுடன் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளார். மேலும் இந்த கூட்டணிக்கு ராஜ் தாக்கரே தனது சகோதரர் உத்தவ் தாக்கரேவின் கவுன்சிலர்களை கொண்டு வந்து ஆதரவளிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பாஜகவினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மகாராஷ்டிராவில் தற்போது பாஜகவின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக உள்ளார். சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். இந்நிலையில் தான் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மாநகராட்சி தேர்தல் நடந்தது.

kalyan-dombivli-eknath-shinde-led-shiv-sena-decided-to-alliance-with-thackeray-brothers-to-away-the

இந்த தேர்தலில் பாஜகவும், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும் கூட்டணி அமைத்து களமிறங்கியது. கல்யாண்-டோம்பிவ்லி மாநகராட்சி தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இது சிவசேனாவின் கோட்டையாகும். இங்கு சிவசேனா தனி மெஜாரிட்டியை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இந்த கல்யாண் டோம்பிவ்லி மாநகராட்சியில் மொத்தம் 122 வார்டுகள் உள்ளன. மேயர் பதவியை தனித்து கைப்பற்ற வேண்டும் என்றால் 62 வார்டுகளில் ஒரு கட்சி வெற்றி பெற வேண்டும். ஆனால் அதிகபட்சமாக ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 53 வார்டுகளிலும், பாஜக 50 வார்டுகளிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா (உத்தவ் அணி) 11 வார்டுகளில், ராஜ் தாக்கரேவின் எம்என்எஸ் கட்சி 5 வார்டுகளிலும், காங்கிரஸ் 2 வார்டுகளிலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.

இந்நிலையில் தான் பாஜக மேயர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கவுன்சிலர்கள் உதவியுடன் பாஜக அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கிறது. இதனை ஏக்நாத் ஷிண்டே விரும்பவில்லை. இதனால் அவர் பாஜகவுக்கு பதில் தனது எதிரியாக இருக்கும் ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியை கைப்பற்ற திட்டமிட்டுள்ளார்.

ராஜ்தாக்கரேவின் எம்என்எஸ் கட்சிக்கு தற்போது 5 கவுன்சிலர்கள் உள்ளனர். சிவசேனாவின் 53 உடன் சேர்த்தால் மொத்த கவுன்சிலர்களின் எண்ணிக்கை 58 ஆக மாறும். மேயர் பதவிக்கு மொத்தம் 62 கவுன்சிலர்களின் ஆதரவு தேவையாக உள்ளது. இதனால் ராஜ்தாக்கரே உதவியுடன் உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவின் கவுன்சிலர்கள் 11 பேரின் ஆதரவை ஏக்நாத் ஷிண்டே தரப்பு கோரியுள்ளது. கொங்கண் பவனில் நடந்த உயர்மட்டக் கூட்டத்திற்குப் பிறகு ஏக்நாத் ஷிண்டேவின் மகனும் எம்.பி.யுமான ஸ்ரீகாந்த், ராஜ் தாக்கரேயின் கட்சியுடனான கூட்டணியை உறுதிப்படுத்தினார்.

மேலும் உத்தவ் தாக்கரே அணியின் 4 கவுன்சிலர்கள் இந்த கூட்டணியில் சேர வாய்ப்புள்ளதாக ஸ்ரீகாந்த் சுட்டிக்காட்டினார். இதன் மூலம் மெஜாரிட்டியை பெற்று ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மேயர் பதவியை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த மாநகராட்சி தேர்லை எடுத்து கொண்டால் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் மேயர் பதவியை தலா இரண்டரை ஆண்டுகள் பகிர்ந்து கொள்ள பாஜக வலியுறுத்திய நிலையில், ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 5 ஆண்டும் மேயர் பதவியை விரும்புகிறது. அதேபோல் மும்பை மாநகராட்சியையும் 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக வசம் வந்துள்ளது. 227 வார்டுகள் உள்ள நிலையில் மேயர் பதவிக்கு மொத்தம் 114 கவுன்சிலர்களின் ஆதரவு வேண்டும்.

தற்போது பாஜக - ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கூட்டணி 118 வார்டுகளில் வென்றது. அதிகபட்சமாக பாஜக 89, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 29 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக மேயர் பதவியை கைப்பற்ற துடிக்கும் நிலையில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அதனை விரும்பவில்லை. இதனால் ஏக்நாத் ஷிண்டே தனது 29 கவுன்சிலர்களையும் ஹோட்டலுக்கு கொண்டு சென்றார்.

மும்பை மாநகராட்சி மேயர் பதவியில் பாஜக மற்றும் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா இடையே இன்னும் கருத்து வேறுபாடு உள்ள நிலையில் கல்யாண்-டோம்பிவ்லி மாநகராட்சியில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா - ராஜ்தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரே கட்சியுடன் கூட்டணி அமைத்து மேயர் பதவியை தட்டித்தூக்க தயாராகி உள்ளது. இது பாஜகவுக்கு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+