மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பதவியை துறக்க தயார்.. வழக்கமாக அழுது புலம்பும் கர்நாடக முதல்வரின் அதிரடி பேச்சு

Google Oneindia Tamil News

Recommended Video

    கர்நாடகாவில் காங்கிரஸ் மதஜ கூட்டணிக்குள் மீண்டும் குழப்பம்- வீடியோ

    பெங்களூர்: காங்கிரஸ் கட்சி விரும்பினால் பதவியை துறக்க தயார் என கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்தார்.

    கடந்த 2018-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யாருக்கும் தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை.

    இதையடுத்து அதிக இடங்களை பெற்ற பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்க காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் இணைந்து ஆட்சி அமைத்தனர். இதில் முதல்வராக குமாரசாமி தேர்வு செய்யப்பட்டார்.

    மோதல்

    இந்நிலையில் பெங்களூரில் நடந்த விழாவில் குமாரசாமி பேசுகையில் கூட்டணி கட்சியினரை திருப்திப்படுத்த வேண்டும். முதல்வர் பணி என்பது ரோஜா முள் படுக்கை என கூறியதன் மூலம் இரு தரப்பிற்கும் இடையே உள்ள மோதல் வெளியே வந்தது.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மஜத கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட குமாரசாமி, காங்கிரஸ் கட்சியினர் என்னை சித்தரவதை செய்கின்றனர் என்று கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதனிடையே ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    துறக்க தயார்

    துறக்க தயார்

    இந்நிலையில் முதல்வர் குமாரசாமி கூறுகையில் காங்கிரஸ் விரும்பினால் முதல்வர் பதவியை துறக்க தயாராக உள்ளேன். சித்தராமையாதான் முதல்வர் என காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூறி வருகின்றனர்.

    கட்டுக்குள் வைக்க...

    கட்டுக்குள் வைக்க...

    அவர்கள் எல்லையை மீறுகின்றனர். காங்கிரஸ் எம்எல்ஏக்களின் செயல்பாடுகளை வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் தனது எம்எல்ஏக்களை கட்டுக்குள் வைக்க வேண்டும் என்றார் குமாரசாமி.

    English summary
    Karnataka Chief Minister HD Kumaraswamy today threatened to step down if Congress MLAs continue to attack him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X