Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"முடிஞ்சா தமிழ்நாட்டுக்கு வா.." போன் செய்து மிரட்டிய சிவசேனா ஆதரவாளருக்கு.. குணால் கம்ரா பதிலடி!

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை விமர்சித்து நகைச்சுவை கலைஞரான குணால் கம்ரா பாடியதாகச் சொல்லி சிவசேனா ஆதரவாளர்கள் கொந்தளிப்பில் உள்ளனர். ஏற்கனவே இது தொடர்பாக ஹோட்டலை அடித்து நொறுக்கியுள்ளனர். இதற்கிடையே குணால் கம்ராவுக்கு போன் செய்த சிவசேனா ஆதரவாளர் அவரை மிரட்டும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அதில் தன்னை பார்க்கத் தமிழகம் வரும்படி குணால் கம்ரா கூறுகிறார்.

நகைச்சுவை கலைஞரான குணால் கம்ரா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் ஒன்றைப் பாடியிருந்தார். அதில் அவர் மகாராஷ்டிர துணை முதல்வரான ஏக்நாத் ஷிண்டேவை மறைமுகமாக விமர்சித்தாக கூறப்படுகிறது. அவர் தனது பாடலில் ஷிண்டே பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்ற போதிலும், தானேவில் இருந்து வந்த தலைவர் என்று ஏக்நாத் ஷிண்டேவையே குணால் குறிப்பிட்டதாக நெட்டிசன்கள் கூறுகிறார்கள்.

shiv sena Eknath Shinde Mumbai

சிவசேனா தொண்டர்கள் ஆத்திரம்

மேலும், ஷிண்டேவை துரோகி என்றும் கட்சியை உடைத்து பாஜகவுடன் இணைந்துவிட்டதாக விமர்சிக்கிறார். இந்த பாடலால் சிவசேனா ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் உள்ளனர். ஏற்கனவே பாடல் பதிவு செய்யப்பட்ட ஸ்டியோ, நட்சத்திர விடுதி ஆகியவற்றை ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனால் அங்குப் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையே சிவசேனா ஆதரவாளர் ஒருவருக்கும் குணால் கம்ராவுக்கும் இடையே நடந்த உரையாடல் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

53 வினாடிகள் ஓடும் அந்த ஆடியோவில் சிவசேனா ஆதரவாளர் எனச் சொல்லிக் கொள்ளும் நபர் குணாலை மிரட்டுகிறார். ஷிண்டே குறித்த பாடலால் ஸ்டுடியோவை அடித்து நொறுக்கியதாகக் குறிப்பிட்டவர், அதே நிலைதான் உனக்கும் ஏற்படும் எனக் குணாலை மிரட்டியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை, அந்த ஸ்டுடியோ மற்றும் ஹோட்டல் இரண்டும் சிவசேனா ஆதரவாளர்கள் அடித்து நொறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

போன் செய்து மிரட்டல்

இந்தச் சூழலில் தான் சிவசேனா ஆதரவாளர்கள் எப்படியோ குணாலின் நம்பரை எடுத்து அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். அதேநேரம் இந்த ஆடியோ உண்மை தானா என்பதை உறுதி செய்யவில்லை.. குணாலை அழைத்த அந்த சிவசேனா ஆதரவாளர் தனது பெயர் ஜெகதீஷ் சர்மா என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வருக்கு எதிராக எப்படிப் பாடலை பாடலம் என கெஜதீஷ் கேட்ட நிலையில், உடனே அவர் (ஷிண்டே) முதல்வர் இல்லை.. இப்போது துணை முதல்வர் என குணால் கூறியுள்ளார். இதைக் கேட்ட சிவசேனா ஆதரவாளர் மேலும் ஆத்திரமடைந்துள்ளார்.

உடனே அந்த சிவசேனா ஆதரவாளர், "உனது ஹோட்டலுக்கும் ஸ்டுடியோவுக்கும் என்ன நடந்தது என்பதைப் போய் பாரு.. நீ கையில் கிடைத்தால் உனக்கும் அதே கதிதான்" என கூறுகிறார். மேலும், கம்ராவை சில காதில் கேட்கவே முடியாத வார்த்தைகளாலும் திட்டுகிறார். அப்போதும் குணால் கம்ரா தான் தற்போது தமிழ்நாட்டில் இருப்பதாகவும், முடிந்தால் இங்கு வா என்பது போலவும் கூறுகிறார்.

shiv sena Eknath Shinde Mumbai

தமிழ்நாட்டிற்கு வா

அப்போது இன்னொரு சிவசேனா ஆதரவாளர் போனை பிடுங்கிக் கொண்டு எங்கே வர வேண்டும் எங்கே வர வேண்டும் எனக் கேட்கிறார்.. அதற்கு குணால் கம்ரா மீண்டும் தான தமிழ்நாட்டில் இருப்பதாகவும் முடிந்தால் நேரில் வா என்றும் குறிப்பிடுகிறார். அப்போது அந்த சிவசேனா ஆதரவாளர், "ஒரு நிமிடம் எனது தலைவரிடம் பேசு" என சொல்கிறார். ஆனால் அத்துடன் போன் கட் ஆகிறது. இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

குணால் கம்ரா- சிவசேனா ஆதரவாளரின் முழு உரையாடல்

குணால் கம்ரா: ஹலோ.

சிவசேனா ஆதரவாளர்: குணால் கம்ரா தானே பேசுகிறதா?

குணால் கம்ரா: ஆம், சொல்லுங்கள்

சிவசேனா ஆதரவாளர்: நான் ஜெகதீஷ் சர்மா... உங்கள் வீடியோவில் தலைவரைப் பற்றி என்ன சொன்னீர்கள்?

shiv sena Eknath Shinde Mumbai

குணால் கம்ரா: யார் அந்த தலைவர்?

சிவசேனா ஆதரவாளர்: ஷிண்டே சாஹேப், எங்க முதல்வர். உங்க வீடியோவில் அவரைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறீர்கள்?

குணால் கம்ரா: அவர் எங்கே முதல்வராக இருக்கிறார்? அவர் துணை முதல்வர் தானே.

சிவசேனா ஆதரவாளர்: எங்க துணை முதல்வர். அவரைப் பற்றி எப்படிப் பாடலை பாடலாம்?

குணால் கம்ரா: நீ வீடியோவை சரியாக பார்த்தையா இல்லையா?

சிவசேனா ஆதரவாளர்: பார்த்தேன். நாங்க உங்க ஹோட்டல் அல்லது ஸ்டுடியோவில் என்ன செய்தோம் என்று பார்த்தையா. நீ எங்கு கண்ணில் பட்டாலும் உனக்கும் அதே கதிதான்.. (காதில் கேட்கவே முடியாத கெட்ட வார்த்தைகளில் திட்டுகிறார்). என்ன புரிகிறதா?

குணால் கம்ரா: தமிழ்நாட்டிற்கு வா.. நான் இப்போ அங்கே தான் இருக்கேன். என்னை இங்கு வந்து பார்த்துக்கொள்.

சிவசேனா ஆதரவாளர்: நீ எங்கே இருக்க?

குணால் கம்ரா: தமிழ்நாடு

சிவசேனா ஆதரவாளர்: தமிழ்நாட்டிற்கு வந்து உன்னைப் பார்த்துக் கொள்கிறோம் (என கூறி தொடர்ந்து கெட்ட வார்த்தையில் திட்டுகிறார்)

சிவசேனா ஆதரவாளர் (மற்றொரு நபர் பிடுங்கிக்கொள்கிறார்): ஹலோ

shiv sena Eknath Shinde Mumbai

குணால் கம்ரா: வா.. வா.. தமிழ்நாட்டிற்கு வா.!

சிவசேனா ஆதரவாளர்: எங்கு வர வேண்டும்?

குணால் கம்ரா: தமிழ்நாடு

சிவசேனா ஆதரவாளர்: சரி தமிழ்நாட்டிற்கு வருவது எப்படி? எப்படி வருவது சொல்லுங்கள்? எங்க சாரிடம் ஒரு நிமிடம் பேசு என்கிறார் அதோடு கால் கட் ஆகிறது.

மும்பை போலீசார் வழக்குப்பதிவு

குணால் கம்ராவின் பாடல் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ள நிலையில், அது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் குணால் மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், குணால் பாடிய நிகழ்ச்சி பதிவு செய்யப்பட்ட ஹாபிடேட் காமெடி கிளப் மற்றும் ஸ்டுடியோ அடித்து நொறுக்கினர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

மன்னிப்பு கேட்க முடியாது

இந்த விவகாரம் குறித்து அம்மாநில முதல்வர் பட்னாவிஸ் கூட கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் மகாராஷ்டிர சட்டசபையிலேயே கூறியிருந்தார். அதேநேரம் குணால் கம்ரா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும், நீதிமன்றம் சொன்னால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் என்றும் கம்ரா கூறியிருக்கிறார்.

இதற்கிடையே ஷிண்டேவை விமர்சித்துப் பாட எதிர்க்கட்சிகள் தான் குணாலுக்கு பணம் கொடுத்தாக சிவசேனா கட்சியினர் விமர்சித்தனர். இருப்பினும், அதைத் திட்டவட்டமாக மறுத்துள்ள குணால் கம்ரா தான் எதிர்க்கட்சிகளிடம் பணம் வாங்கவில்லை என்றும் கூறியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+