லிவிங் டுகெதர்.. ஒரே வீட்டில் வாழ்ந்த ஜோடி.. அழுதுட்டே கோர்ட்டுக்கு போன பெண்.. கடைசியில பார்த்தால்?
மும்பை: லிவிங் டு கெதர் வழக்கு ஒன்று நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நம்பி சென்றவரால் ஏமாற்றப்பட்ட இளம்பெண் ஒருவர் இது தொடர்பாக நீதி கேட்டு கோர்ட்டை நாடினார்.. ஆனால், நீதிமன்றம் தந்த உத்தரவானது, திடீர் திருப்பத்தை தந்துவிட்டது.
திருமணம் செய்து கொண்டு வாழ்வதால், ஏகப்பட்ட பிரச்சனைகளும், தேவையில்லாத சிக்கல்களும் ஏற்படுவதாக கருதி, லிவிங் டுகெதர் கலாச்சாரத்தை சிலர் கடைப்பிடித்து வருகிறார்கள். இந்த லிவிங் டூகெதர் முறையில் பல வருடம் ஒற்றுமையாக வாழ்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

சீதா குமாரி: ஆனால் சமீபகாலமாக, இந்த உறவுமுறையில் சிக்கல்கள் ஏற்பட்டு, வன்முறையிலும் முடிந்துவிடுகிறது.. கடந்த வாரம் ஒரு சம்பவம் நடந்தது. பீகாரை சேர்ந்த விஜய்குமார் யாதவ் என்பவர், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பால் வியாபாரம் செய்து வருகிறார். சீதா குமாரி என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, ஒரே வீட்டில் வசித்து வந்தார். சீதா குமாரிக்கு திருமணமாகவில்லை.. இவரும் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்தான்.
ஒருகட்டத்தில் தன்னையே திருமணம் செய்து கொள்ளும்படி சீதா குமாரி, விஜய்குமாரிடம் வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.. எனவே, சொந்த ஊரிலுள்ள தன்னுடைய குடும்பத்துக்கு விஜய்குமார், மாத மாதம் பணம் அனுப்பி வருவதும் சீதா குமாரிக்கு பிடிக்கவில்லை.. இது தொடர்பாக இருவருக்கும் பல முறை வாக்குவாதம் வெடித்துள்ளது.
ஹவுஸ் ஓனர்: சம்பவத்தன்று விஜய் குமார் சாப்பிட்டுவிட்டு தூங்கியுள்ளார். அப்போது சீதா குமாரி விஜய்குமாரின் கை, கால்களை கட்டிப்போட்டுவிட்டு, அவரது அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கிவிட்டு, அங்கிருந்து கிளம்பிவிட்டார். ஆனால், செல்லும் வழியில், வீட்டின் உரிமையாளரை சந்தித்து, விஜய்குமார் தாக்கப்பட்ட தகவலையும் சொல்லி, உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாகவும் சொல்லிவிட்டு போனார் சீதா குமாரி.
இப்போது மும்பையிலும் ஒரு லிவி இன் ரிலேஷன்ஷிப் சம்பவம், கோர்ட் வரை சென்றுள்ளது.. மும்பையில் வசித்து வரும் 29 வயது பெண்ணுக்கும், 46 வயதுடைய நபருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது.. இருவருமே லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்துள்ளனர். இந்த பெண் முதியவர்களை பராமரிக்கும் கேர் டேக்கராக பணியாற்றி வருகிறார் 46 வயது நபரோ, அரசு ஊழியர் ஆவார்.
திருமணம்: ஆனால், அந்த நபருக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதுமட்டுமல்ல, அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதும் பெண்ணுக்கு தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், அந்நபருடனான லிவிங் டுகெதர் உறவை துண்டிக்க முடிவு செய்தார்.
இந்த விஷயம் அறிந்த அந்த 46 வயது நபர், இந்த 29 வயது பெண்ணை சித்ரவதை செய்ய துவங்கினார்.. லிவிங் டுகெதரில் ஒன்றாக வாழ்ந்தபோது எடுத்த அந்தரங்க வீடியோவை காண்பித்து, தன்னுடன் தொடர்ந்து உல்லாசம் அனுபவிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியிருக்கிறார்.. இப்படியே பலமுறை அப்பெண்ணை பலாத்காரம் செய்துவந்துள்ளார்.
ஆவேசம்: இதனால் ஆவேசமடைந்த பெண், இது குறித்து போலீசில் புகார் தந்தார்.. போலீசாரும் அந்த 46 வயது நபரிடம் விசாரணை மேற்கொண்டனர்.. போலீசார் இப்படி விசாரித்து கொண்டிருக்கும்பாதே அந்த நபர், முன்ஜாமீன் கோரி கோர்ட்டுக்கு போனார்.
அந்த 29 வயதுடைய பெண் தன்னுடன்தான் ஒரே வீட்டில் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்துவந்தார் என்று கூறி அதற்கான ஆதாரங்களை கோர்ட்டில் காண்பித்தார்.
உத்தரவு: 11 மாதங்கள், அதாவது கடந்த ஆகஸ்ட் 1, 2024 முதல் ஜூன் 30, 2025 வரை, ஒரே வீட்டில் லிவ் இன் ரிலேஷன்ஷிப் உறவை வாழ்ந்து வந்தோம் என்பதற்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்துடன், லிவ் இன் உறவுக்குள் செல்லும் முன்பு, "லிவ் இன் உறவுக்கு பிறகு பலாத்கார வழக்கு போடக்கூடாது" என்று இரு தரப்பிலுமே ஒப்பந்தம் போட்டுக் கொண்டதாக கூறி அந்த ஆவணத்தையும் கோர்ட்டில் சமர்ப்பித்தார்.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் உள்ளது தன்னுடைய கையெழுத்து கிடையாது என்று அந்த பெண் கோர்ட்டில் வாதிட்டார். ஆனால், அவரது வாதம் எடுபடவில்லை.. குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அப்பெண்ணின் வாதத்தை மறுத்தார். "இருவருமே ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். 2 பேருமே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளனர்... இது பொய்யான வழக்கு" என்று வாதம் செய்தார்.
பத்திரம்: இறுதியில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் சம்பந்தப்பட்ட பெண்ணின் அந்தரங்க வீடியோக்களின் ஆதாரங்களை சமர்ப்பிக்காததால் அவருக்கு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது...!!!
லிவ் இன் உறவுமுறையில் சிக்கல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண் கோர்ட்டுக்கு சென்ற விவகாரமும், பத்திரத்தில் அக்ரிமெண்ட் போட்டுக் கொண்டு, லிவ் இன் உறவுக்குள் நுழைந்த சமாச்சாரமும், சம்பந்தப்பட்டவருக்கு நீதிமன்றம் தந்த ஜாமீனும் தொடர்ந்து விவாதத்தை கிளப்பிவிட்டு வருகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications